Just some random thoughts

Saturday, September 19, 2009

EEram - Get wet soon !



படம் பார்ப்பதே ஒரு சுவையான அனுபவம்.நம் நடிகரின் படமென்றால் கொஞ்சம் எதிர்ப்பார்ப்புடனும், அவர் அற்புதமாக நடித்தால் திரை அரங்கில் ஆர்ப்பரிக்க வேண்டுமென்ற ஆசையும், படம் சொதப்பிவிடுமோ என்று பயமும்,போன்ற பல உணர்வுகளுடன் பார்க்கும் அனுபவம். இயக்குனருக்கு, அவர் மனதில் நினைத்த கதை வர வேண்டும், அடுத்த படம் இயக்கும் அளவிற்க்கு திரை அரங்கில் கூட்டம் குவிய வேண்டும், இப்படி இப்படி காட்சிகளை நகர்த்தினால் பார்வையாளர்கள் கடிகாரத்தை பார்க்காமல் இருக்க மாட்டார்கள்- என்ற திரை கதை வேண்டும். முடிவாக பார்ப்பவர்களுக்கு ' கொடுத்த காசுக்கு டைம் பாஸ்' ஆக வேண்டும்- கலை படமாக இருந்தாலும் சரி, மசாலா படமாக இருந்தாலும் சரி.

ஈரம்- ஒரு மாலை பொழுதில் என்னுடய முன்று மணி நேரத்தை எடுத்து கொண்டது, எனக்கு தெரியாமல்- என் கண்களையும், மற்ற புலன்களையும் கடத்தி சென்றது.காட்சிகள் முன்னும் ,பின்னுமாக செல்வதயும், கதாபத்திரங்கள் பல்வெறு பரிமாணங்கள் வெளிபடுவதை- அதை ஒரு கோர்வையாக சொல்வது தமனின் இசை தான். இந்த இசயில் கொஞ்சம் தவறு நடந்து விட்டாலும் கூட கேலி கூத்தாக மாறி விடும். உதாரணமாக, முதல் பாதியில் , வாசுவின் காதாலும், வாசுவின் புலன் ஆய்வும் ஒன்றொடு ஒன்றாக பினைந்து இருந்தாலும் , அதை ஒரே கோர்வையாக காட்டி இருப்பது தமன்னின் இசையும், ஒலிபதிவும் தான். நாம் திரை அரங்கை விட்டு வெளியே வந்தால் ,துணியில் ஈரம் ஏற்பட்டதை போல ஒரு பிரம்மை ஏற்படுகிறது.

கதை என்னவென்று பார்த்தால் - ஒரு பெண், பல கொலைகள், அவளின் முன்னாள் காதலன், கணவன், அந்த அபார்ட்மென்டில் குடி இருக்கும் நபர்கள்- சில சந்தேகங்களை தூவி , நடுவில் கொலையாளி யாரென்று கூறி, பின் பாதியில், கால பரிமாணத்தில் பின்னோக்கி சென்று, அதன் காரணமாக முடிவில் ஒரு சின்ன முடிச்சு .syd field in 3- part structure படி தான் திரை கதை இருக்க வேண்டும் என்பதில்லை. சுவார்ஸ்யமாக இருக்க வேண்டும். மக்களை கட்டி போட வேண்டும். காலையில் மனைவியுடன் போட்ட சண்டை மறக்க வேண்டும். அவ்வளவு தான்.பாலா போன்றவர்கள் , கதையில் பெரிய முடிச்சுகள் வைக்க மாட்டார்கள். கதாபாத்திரம்-, அவர்களின் குணாதசியங்கள், இது தான் முடன்மை.. இதற்க்கு மாற்றாக , மணிரத்தினம் அவர்களின் படங்களில் , கதாபாத்திரத்தின் தன்மையை விட காட்ச்சிகளின் கோர்வை தான் பிரதானம். .யோசித்து பாருங்கள்- சேது, நந்தா ( இது கொஞ்சம் விதி விலக்கு) , பிதாமகன், எல்லாவற்றுக்கும் மேலாக நான் கடவுள்-இந்த படங்களில் நமக்கு உடனே நியாபகம் வருட்வது அந்த படத்தில் இருக்கும் மைய்ய கதாபாத்திரங்கள், அவர்களின் குணாதசியங்கள். இதற்கு மாறக , மணிரத்தம் அவர்களின் படங்களில், காட்ச்களின் கோர்வை தான் பிரதானம். ஆனால் இருண்டுமே மக்களை ஐம்பது ரூபாய் செலவழிக்க செய்தது.

ஈரம் படத்தை பொறுத்த வரை - காட்சிகளின் கோர்வையும் சரி, கதாபாத்திரத்தின் குணாதசியமும் சரி , குறிப்பாக பாலு(நந்தா) வின் கதாபாத்திரம் பின் பாதியில் செதுக்க பட்ட விதமும் , அதற்க்கு சரியாக உயிர் கொடுத்த நந்தாவின் நடிப்பும் சரி ,படத்தில் வரும் கொலைகளிருந்தும், புலன் ஆயிவிலிருந்தும் கொஞ்சம் கவனத்தை இழுத்தாலும் , பார்வையாளர்களின் கவனம் படத்தில் மட்டும் இருக்க செய்தது! கவனம்-ஒவ்வரு திரைஅரங்கிலும் , படம் பார்க்கும் அனுபவம் விதியாசம். மாயாஜாலில் பார்த்தால் , கொஞ்சம் கூர்ந்து கவனிக்க முடியும் . நான் பார்த்த்தோ காரப்பாக்கம் அரவிந்தில் - கதாபாத்திரத்தின் ஒவ்வொரு காட்சியும் எப்பொழுதெல்லாம் அவர்களின் , குறிப்பாக கல்லுரி இளைஞர்களின் தினசரி வாழ்கையில் வரும் பேச்சுகளை நினைபடுத்துமோ, அப்பொழுதெல்லாம் ஆர்பரித்தனர், விசில் அடித்தனர். உதாரணதிற்க்கு, பாலாவின் நண்பன், 'பிறர் மனை நோக்கும்' சமாச்க்ரங்களை பற்றி பேசும் போழுது , செம விசில்.

படத்தில் பல்வேறு உணர்ச்சிகள் பிரதிபலிக்கின்றன. தன் காதலியை அவதுறாக பேசுவதை நம்ப முடியாமல் தவிக்கும் வாசு ( மிருகம் ஆதி ,காதலனாகவும் , பின்பு காவல்காரராகவும் கதாபதிரத்தின் இரண்டு கலா பரிமாணத்தை நன்றாக செய்திருக்கிறார்),காதலில் தவித்து , கல்யாணத்தில் மிதந்து, அதில் சந்தோஷபட்டு, விதியும் , சுற்றார்களின் சூழ்ச்சியாலும் மிதக்கும் ரம்யா(சிந்து மெனான்- அற்புதமான நடிப்பு) , பின் பாதியில் வெளிப்படும் சந்தேகம்,கோபம்,பரிதாபம்- இப்படி பல ..இவை எல்லாவறிற்க்கும் அடி நாதம் - ஒலிப்பதிவு. உதாரணமாக , முன் பாதியில், வாசு கார் ஒட்டி கொண்டு பொகும் பொழுது , அவன் நினைவு பின் நோக்கி செல்கின்றன .ஆனால் , ஒலிப்பதிவு, அந்த கொலை நடந்த அந்த அழுத்த்தை நமக்கு நினைவு படுத்தி இருக்கின்றன - மழை மூலமாக,அந்த correct aana color tone மூலமாக .கொலைகள் நடக்கும் விதமும் , அகோரத்தை காட்டாமல், ஒலியும், ஓளியும் மூலமாக காட்டியிருப்பது தூள்.

படம் பார்த்து விட்டு - வெளியே வந்தேன். சொழிங்கநல்லுர்- மேடவாக்கம் 4 கிலோ மீட்டர் சாலை.மழை முடிந்து குளிர்ந்த காற்று வீசியது. என்னுடய முக்கு கன்ணாடியை மாட்டி கொண்டு பைக்கில் புறப்பட்டேன்.நான வேக வேக மாக செல்ல , காற்றும் பலமாக வீசியது.ஒரு ஐந்து நிமிடம் கழித்து , என்னுடய மூக்கு கன்ணாடியில் கொஞ்சம் கொஞ்சமாக பனி மூட ஆரம்பித்தது.சாதாரண விஷியம் தான் . இந்த படத்தை பார்த்த் பின்பு இல்லை . வண்டியை நிறுத்தினேன்.மூக்கு கண்ணாடியை கழட்டி பாக்கேட்டில் வைத்தேன்.

Saturday, July 11, 2009

நான் கற்ற பாடம்

வலைபூவில் எழுதி இரண்டு மாதம் ஆகி விட்டது. வேலையில் எல்லா பொறுப்பையும் தலை மேல் போட்டு கொண்டால் என்ன ஆகுமென்று நன்றாக தெரிந்து விட்டது.நான் கற்ற சில பாடங்கள்.

1) வேலையில் வெற்றி வர வர வாழ்க்கையில் இது மட்டும் போதுமென்றும் , மற்ற் விஷயங்களை இந்த தற்காலிக வெற்றிகள் பார்த்து கொள்ளுமென்ற ஒரு நினைப்பு வரும்.

2) இரவில் ஒரு மாததிற்க்காக மேலாக இரவு இரண்டு மணி மேலாக வேலை செய்தேன். இரவில் இரண்டு வாகனம் ஒட்டும் போது பாதி தூக்க கலக்கம் தான். ஒரு நாய் இடையில் வந்தால் கூட ஒரு சில விரல்கள் போகும் வரைக்காவது விபத்து ஏற்ப்பட்டிருக்கலாம்.

3)இரவில் வீட்டுசாப்புடு சாப்பிடாமல் , ஹோட்டலில் , அந்த ஹோட்டல் முதலாளி கூட சாப்பிடாத உனவை தான் சாபிட்டேன். முதலில் நெய் ரொஸ்ட் நன்றாக தான் இருந்தது. ஒரு மாதம் கழித்து , வயிரை கிழிக்க ஆரம்பித்து விட்டது.

4) கடினமாக உழைப்பில் கிடைக்கும் தாற்காலிக வெற்றியில் , என் உள்ளே இருக்கும் மற்ற கலை திறமைகள் முச்சு திணர, நுரை தத்த சாகடிக்க பட்டுள்ளது. முன்பு கதை எழுத வேண்டுமென்று தினசரி பேப்பர் படிப்பேன். இப்பொழுது அதற்க்கு கூட பேப்பரை தொடுவதில்லை.

5) முக்கியமாக குடும்பத்தில் உறவுகள் பாதிக்க படும். அழகான ஒரு வயது தேவதைவீட்டிலிருப்பது மறந்து விட்டது. மின்சார கட்டணம் முதல் , என் வண்டியியை துடைக்கும் எனது அறுபது வயது அப்பாவும் , அவரது உழைப்பும் புத்தியில் தங்க வில்லை.

6)இரவு பத்து மணிக்கு வந்து விட்டாலும் , தினமும் இரண்டு மணிக்கு தூங்குனம் பழக்கம் ஏற்பட்டு விட்டதால் , தூங்க முடியவில்லை . உடம்பில் அசதி , கண் உலகை மற்ற முயர்ச்சி செய்கின்றது.

7) இவவளவும் உழைத்த பின்பு நீ உழைப்பது பத்தாதென்று சொலுவர்கள். போதுமடாசாமி !!!

Saturday, April 25, 2009

கொஞ்சம் பயமா இருக்கு !!

Thursday, April 23, 2009

முடிகிட்டு போ !


இலங்கையில் உள்ள அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்கும் போரினை நிறுத்த ஒரு நாள் வாழ்க்கையை, இங்கு நமது முதல் அமைச்சர் நிறுத்தியுள்ளார்.இது சரியா தவறா என்பது அப்புறம். சரியென்று வைத்து கொண்டால் கூட , எப்படி சரி ? இப்பொழுது பாராளுமன்ற தேர்தல் நடக்கின்றது. அதனால் மத்தியில் உள்ள நமது 'ஹம். ஆப்கே ஹே கவ்ன்' அரசியல்வாதிகள், இதை கண்டிப்பாக கண்டுகொள்ள மாடார்கள். அப்படியே இருந்தாலும் , எதோ காது நோண்டுவதற்க்காக இலங்கை அதிபரை எச்சில் அறிக்கை செய்வார்கள். இலங்கை போயி ஒரு மசால் வடை சாப்பிட்டு வருவார் நமது பிரானாப் முகர்ஜி.இதை ஒரு பெரிய மயிராட்டம் தினகரனில் சாதனையாக போடுவார்கள்.இவ்வளவு தான் நடக்கும். ஐம்பது வருட போரை ஒரு பந்தை வைத்து நிறுத்த முற்ப்பட்டால்?

இதில் இன்னொரு கூத்து இருக்கிறது. இலங்கையில் பொது மக்கள் LTTE யில் பிடியிலிருது வெளியேறி வருகின்றனர். சுமார் 60000 மக்கள் இது வரை வெளியேறி பாதுக்காபான இடத்துக்கு கொண்டு செல்ல பட்டனர். அதில் வெளியான செய்திகளில், புலிகள் தங்களை கேடயமாக பயன் படுத்தியதாக கூறியள்ளனர். இதற்கு நமது புலி ஆதரவாளார்கள் என்ன சொல்லுகின்றனர்? இந்த மாதிரி செய்தி வரும் போழுது அமைதி தான் . சோ மட்டும் அதை பற்றி எழுது வார் . ஆ,வி, குமுதம் யெல்லாம் அமைதி தான்.இதை வைத்து புலிகளை கண்டிக்க வேண்டுமென்று சொல்ல வில்லை. ஆனால் இது பொய்யென்று கூட யாரும் சொல்ல வில்லை!

சரி , இந்த பந்த் தவறென்றால் என் தவறு ? ஒரு பந்த் நடத்தினால் யாரெல்லாம் அவதிக்கு உள்ளாகின்றனர்? நமது பொது மக்கள் தான். பல கோடி வருவாய் நமது அரசுக்கும், சில பல தனியார் நிறுவனதிற்க்கும் தான் . இலங்கயில் நடக்கும் போருக்கு நாம் என் நஷ்டம் அடய வேண்டும் ? அப்படியே ஏதாவது செய்ய்ய நினைதால் நஷ்டம் வராமல் ஏதாவது செய்ய்யலாமே? அவசரதிற்க்கு ஆட்டோ கூட கிடைக்க வில்லை . இன்டர்னெட் இணைப்பை கூட ஆறு மணி வரை துண்டித்து உள்ளானர். என்ன சார் நியாயம் ?ஆனால் ஒன்று -நமது IT யில் பணி புரியும் நன்பர்கள் இதை வரவேற்க்கின்றனர். ஒரு நாள் விடுமுறை ஆயிற்றே! வியாழனுக்கு பதில் சனி வர சொல்லிய்ருக்கின்றனர்.எப்படியும் சனி கிழமைகளில் வேலை செய்ய்ய வேண்டும் . அதனால பரவாயில்லை


PS : இரண்டு நல்ல விஷயங்கள்.

1. இந்த பந்திலும் வீட்டில் உள்ள குப்பைகளை எடுத்து கொண்டு போகும் ஆட்கள் வந்தனர். எனக்கு உண்மையில் அவர்களின் கடமை உணர்ச்சி புல்லரிகின்றது . அவர்களுக்கு சம்பளம் இன்னும் கொஞ்சம் கூட தர வேண்டும்!

2. வாய் கிழிய பேசும் நமது மர மண்டை தமிழர்களுக்கு மத்தியில், ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் இலங்கை சென்று அங்குள்ள தமிழர்க்ளை காண சென்றுள்ளனர். பகுத்தறிவு கொழுந்தான வீரமணி , ஞானி இதை பற்றி ஒன்றும் சொல்லும் மாட்டார்கள்.

Sunday, April 19, 2009

அயன், IPL, அரசியல் கூத்து

நம் நாட்டின் மாடு சூடா மன்னர் இன்று காங்கிரஸ் மேல் ஒரு குண்டை வீசி இருக்கிறார். 1992 வில் நடந்த பாபர் மசுதி இடிப்பிற்கு காங்கிரஸ் உடந்தை - அதாவது , அப்போழுது பிரதம மந்திரியாக இருந்த நமது மொனலிசா நரஸிம்ம ராவ் பாபர் மசுதி இடிக்க படுமென்று தெரிந்தும் ஒன்றும் பண்ணவில்லை.இது ஏற்க கூடியதாக இல்லை . எல்.கே.அத்வானி அவர்களே இதை ஏதிர்பார்திருக்க மாட்டார்.பத்தியாயிரம் , உணர்வு ததும்பும் மக்கள் ஒரு இடத்தில் ஒன்று கூடினால் , அங்கு என்ன நடக்குமென்று யாருக்கும் தெரியாது-குஜராத்தில் நடந்ததை போல . ஆனால் இப்படி அவர்களை உணர்ச்சி வச படி பேசியது பா.ஜா.காவின் சில தலைவர்களாக இருக்கலாம். சரி , இந்த விஷியத்திற்க்கு வருவோம். நமது லொள்ளு லாலு ஜி , பிரதம மந்திரியை பார்த்து அதிகம் பேச வேண்டாம் , அப்படி பேசினால் , இது போன்ற ரகசியங்களை சொல்ல வேண்டியிருக்கும் யென்று ஏச்சி அரித்து உள்ளார். ஐந்து ஆண்டு காலமாக இரயில்வே மந்திரியாக இருந்த போழுது, இது தெரிய வில்லை . அதுவும் நம்ம பச்ச புள்ள மன்மோஹன் SINh பார்த்து! ஆனால இதை பற்றி நாம கவலை பட வேண்டாம் . நோக்கியா ....மன்னிக்கவும்,சோனியா காந்தி மீது நம்பிக்கை இருக்கிறதென்று கூரி விட்டு , இரண்டு அமைச்சர் பதவி வாங்கி கொண்டு காங்கிரஸ் ஆட்சி வர நமது மாட்டுகார வேலன் உதவி செய்வார்.

***
இன்று IPL 2 வில் பஞ்சாப் அணியினரும் தில்லி அணியினரும் மோதி முடிந்த வரை நம்மை அவமான படுத்தினர்.20-20 யென்பதே ஒரு சுருக்க பட்ட புது முயற்ச்சி. அதிலும் மழை காரணமாக ஒரு அணி 12 ஒவர் பெட் செய்வதும் , மறுபடியும் மழை வந்து அடுத்த அணி வெறும் 7 ஒவர் விளையாடுவதும் லூசு தனமாக இருக்கிறது.முடிந்த வரை IPL பார்க்காதிர்கள். இப்பொழுது உள்ள பொருளாதார நிலைமயில் , எதாவ்து படிக்கவும். உங்களுடய மெள் அதிகாரிக்கு சோப் போடவும். அதுவும் இல்லயென்றால் காண்டம் வாங்கி கொண்டு வீடிற்க்கு போகவும் . எதாவ்து ஒன்று உருப்புடும்.

***

ஒரு வாரம் முன்பு அயன் பார்த்தேன். தமன்னாவின் உதடு , ஹாரிஸ் பாடல்கள், சுர்யாவின் திறமையான நடிப்பு , ஜகனின் ஹாஸியம் , வில்லனை தவிர எல்லாம் நன்றாக இருந்தது.குறிப்பாக அந்த ஆப்ப்ரிக்க சண்டை காட்சியின் வேகமும் , அழகான இருவர் நடுவே காதல் வளரும் விதமும், படம் பார்ப்பவர்களின் கவனத்தை தம் மிலிருந்து திரைக்கு கொண்டு வருகிறது.ஆனால் , அந்த வில்லன் ? இந்தியில் வசனத்தை பேசி , தமிழில் அதை டப் செய்து ,தமன்னாவிற்க்கு போட்டியாக முடி வளர்த்து , ஹாரிஸை விட்டு ஒரு செல்லோ பின்னனி இசையை கொடுத்தால் போதுமா? ஒரே ஒரு இடத்தில் , அவர் முதலில் கஞ்சாவை தொட்டு கொள்ளும் போழுது மட்டும் அவர் கதாபத்திரம் அழுத்தமாக பதிகிறது.மற்றபடி , மஹாபாரததில் அரக்கனின் கதாபாத்திராத்தில் எவ்வள்வு அழுத்தமோ, அதில் பாதி தான் இந்த வில்லனுக்கு.இந்த படத்தில் ம்ற்றொரு நல்ல விஷியம் , ஜெகனின் கதாபாத்திரம் தான் . முன் பகுதியில் , ஹாஸியதிற்க்கும், பின் பகுதியில் , சென்டிமென்டிற்க்கும் நன்றாக ஒத்து வருகிறார். சந்தானதிற்க்கு நல போட்டி.

1+1=2 போன்று நல்ல லாஜிக் உள்ளது , சண்டை காட்ச்சிகளிலும் கூட - சினிமாவின் விதிகளுக்கு உட்பட்டு! ஆக மோத்தம் முன்று மணி நேரம் நல்ல டைம் பாஸ்!!!!

Thursday, March 26, 2009

Pasanga - coming of Age

நிலா காய்கிறது போன்று ஆரம்பித்து , உழவன் , தாஜ்மஹால் இசையை நினைவு படுத்தி பாலமுரளி கிருஷ்ணாவின் குரலில் மிதக்கிறது 'அன்பாலே' பாடல் . பால முரளி அவர்களின் குரல் கொஞ்சம் லெசாக பொருந்தாமல் இருக்கிறது. ஆனால் அருமையான ரஹ்மான் மாதிரியான பாடல்- குறிப்பாக பாடலில் வரும் புல்லாங்குழல், இரண்டாம் சரணதிற்க்கு முன்பு வரும்BGM அருமையோஅருமை.

கொஞ்சம் michale jackson சாயல் வந்துவிடுவொமோ யென்ற பயத்தில் அரம்பிக்கும் 'ஒரு வெட்கம்' , சமீபத்தில் வந்த வாரணம் ஆயிரம் ரகம்.அருமை , பாடலில் தொடர்ச்சியாக வரும் அந்த bass lines , ரிதம் அருமை . shreya ghoshal பக்கா , அதுவும் சரணம் ஆரம்பத்தில் அவரது குரலும் bass lines உம் சொக்க வைக்கிறது .கண்டிப்பாக இந்த வருடத்தின் சிறந்த பாடல் , கொஞ்சம் சுமாராக படம் பிடித்தாலும்.

தீம் முசிக் மாதிரி ஆரம்பித்து குழந்தைகளின் rock பாடல் மாதிரி இருக்கிறது. சரணத்தில் , கொஞ்சம் என்னுடய விருப்பமான கார்திக்ராஜாவை நினைவுபடுத்திகிறார். பாடல் வரிகளில் , வாண்டுகளின் அட்டாகசம் ததும்பிகிறது.

பென்னி தாயளின் பெயரை பார்த்த உடன் தெரிந்து விட்டது , இது ஒரு இன்னொரு சுப்பிரமணியபுர rock பாடல் மாதிரி தான் இருக்க போகிறதுஎன்று. நன்று. துள்ளலாக இருக்கிறது. ஆனால் அடுத்த படத்தில் உபயகோபடுத்த வேண்டாம்.

ஜேம்ஸ் வசந்தன்- இவர் கற்புறம் இல்லை , சுரியனாக வர வாழ்த்துகள். அதற்க்கு இரண்டம் படி வைத்து விட்டார்.

Saturday, March 07, 2009

TN07 AL 4777 and AAmir

taxi நம்பர் படமும் ஆமீரும் நேற்று பார்த்தேன் . இரண்டு படமும் பார்த்தேன் . இரண்டுமே , ஒரு நாளில் நடக்கும் கதையை இரண்டு மணி நேரத்தில் சுருக்கி கூறப்பட்டுள்ளது . இறுதியில் , நமது ரசிகர்கள் மனம் நோகாதவாறு , ஆமீரில் கொஞ்சம் சோகம் கலந்திருந்தாலும் , முடிவில் பாஸிடிவாக முடித்திருக்கிறார்கள்.

ஆமீரில் , வெளி நாட்டிலிருந்து வீடு திரும்பும் ஒரு முஸ்லீம் டாக்டர் , ஒரு தீவிரவாதியின் செல்ஃபோனில் சிக்கி , விக்கி , தவித்து முடிவில் , தனது பெயருக்கேற்ப்ப ( ஆமீர் ஏன்றால் தலைவனென்று பொருள்) ஒரு காரியத்தை செய்கிறார். ஆமீர் , புத்துணர்ச்சி பெற்ற இந்தி சினிமாவின் ஒரு அடையாளம். பாடல்கள் இல்லை , காதல் இல்லை , ஸ்டார் இல்லை , அதிகமாய் சிருக்கும் வில்லனில்லை. இருந்தும் இரண்டு மணி நேரம் , அடுத்து என்ன நடக்க இருக்க போகின்ற ஆவலை நம்மிடம் தூண்டுகின்றது .

ஆனால் taxi நம்பர் படத்தை அப்படி சொல்ல முடியவில்லை . விறுவிறுப்பான கதை தான் . தேவையில்லாத இரண்டு பாடல்கள் கூட பரவாயில்லை -ஏதிரும் , புதிருமாக இருக்கும் இரண்டு நபர்களின் குணா தசியங்களை விலக்கும் விதத்தில் ஜோலித்திருக்க்கும் இயக்குனர் , இரண்டாம் பகுதியில் படத்த்குப்பில் விழந்த ஒட்டையை இடுப்போ , மார்போ வைத்து அடைக்க மறந்து விட்டார். டாக்ஸி டிரைவராக , கோபம் கொப்பளிக்கும் மனிதராக , உண்மையை மறைக்கும் கணவனாக , பழி வாங்கும் கதா பாதிரமாக - இப்படி பல குணா தசியங்களை , பட தொகுப்பின் சொதப்பல்களிலும் , கொஞ்சம் நகைச்சுவை கலந்து அருமையாக கொடுத்திருக்கிறார் பசுபதி . இவரின் கிழக்குக்கு மேற்க்காக நம்ம ' அஞ்சாதே' அஜ்மல் , இதில் பணக்காரணாக , தந்தையின் சொத்தை திரும்பி பெற வாதாடும் மகனாக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். முன்னவரின் டாக்சியில் இயவர் ஏர போக , அது எப்படி இருவரின் வாழ்க்கையை பாதிக்கிறதென்பது தான் கதை.

ஆமீருக்கும் , taxi நம்பர் படத்திற்க்கும் உள்ள இன்னொரு ஒற்றுமை , jazz இசையை மையமாக வைத்து அமைந்துள்ள பின்னனி இசை . ஆமீரில் , இது கொஞ்சம் தூக்கம். ஹாலிவுடில் , இந்த மாதிரி படத்திற்க்கு jazz இசையை தான் பயன் படுத்துவர்.இங்கேயும் கச்சிதமாக பொருந்தியிருக்கிரது. கூறிப்ப்பாக , முதல் பதினைது நிமிடங்களில் theme செட் பண்ணும் இந்த பினனி தூள்.ஆமீரில் பாடல்கல் பின்னனியாக , படத்துடன் கலந்து வருகிறது . தீவிரவாதி அவரை ஒவ்வொரு இடமாக அலைய விட்டு, அப்படி அலயும் போது , கதாநாயகனின் முஸ்லீம் இன உனர்ச்சியை உஸ்ப்பேத்தி விடும் காட்சிகள் , ஒரு நல்ல சைக்கிளாகிகல் யுக்க்தி.அதே சமயம் , ஆமீரை பார்த்து , ஐஸ் குச்சியை நக்கிய படி , அந்த விபச்சாரி , தான் ஆங்கில காம யுக்திகளிலும் அனுபவமிக்கவளென்று சொல்லுவது மும்பை இயக்குனருக்கான லொள்ளு.


80ஸில் , பணக்கார பெண்ணும் , எழை ஆணும் படத்தின் பாதி வரை சண்டை போட்டு விட்டு , அப்புறம் ஜப்பானில் போயி டுயட் பாடுவர்கள். டாக்ஸியில் கிட்ட தட்ட அப்படி தான் . ஆனால் ஹீரோயின் கிடையாது . அதற்க்கு பதிலாக அஜ்மல் - ஏதிர்பாராத விதமாக பசுபதி வண்டியில் ஏறி விட்டு , அதில் தன் பாங்க் லாக்கரில் கீயை விட்டு விட , அந்த டாக்ஸி விபத்தில் மட்ட அதிலிருந்து எலி-புனை கதை ஆரம்பிக்கிறது.ஆமீரில் , எலி த்னது வீட்டிற்க்கு போகும்ம இல்லயா என்பதௌ தான் மைய்யம் . இந்த ஒரு வித்தியாசித்திலாலே , ஆமீருடன் நமக்கு கொஞ்சம் பினைப்பு அதிகமாக இருக்கிறது.டாக்ஸியில் , விறுவிறுப்பிற்க்கு தீனி கம்மி . இன்னும் கொஞ்சம் தீனி போட்டு , கதா பாத்திரங்களுடன் பினைப்பு ஏற்படுகிற மாதிரி பண்ணியிருந்தால் , டாக்ஸி நன்றாக் இருந்திருக்கும் , சிம்ரன் , பசுபதியின் நடிப்பை போல .

Blog Archive

About Me