
படம் பார்ப்பதே ஒரு சுவையான அனுபவம்.நம் நடிகரின் படமென்றால் கொஞ்சம் எதிர்ப்பார்ப்புடனும், அவர் அற்புதமாக நடித்தால் திரை அரங்கில் ஆர்ப்பரிக்க வேண்டுமென்ற ஆசையும், படம் சொதப்பிவிடுமோ என்று பயமும்,போன்ற பல உணர்வுகளுடன் பார்க்கும் அனுபவம். இயக்குனருக்கு, அவர் மனதில் நினைத்த கதை வர வேண்டும், அடுத்த படம் இயக்கும் அளவிற்க்கு திரை அரங்கில் கூட்டம் குவிய வேண்டும், இப்படி இப்படி காட்சிகளை நகர்த்தினால் பார்வையாளர்கள் கடிகாரத்தை பார்க்காமல் இருக்க மாட்டார்கள்- என்ற திரை கதை வேண்டும். முடிவாக பார்ப்பவர்களுக்கு ' கொடுத்த காசுக்கு டைம் பாஸ்' ஆக வேண்டும்- கலை படமாக இருந்தாலும் சரி, மசாலா படமாக இருந்தாலும் சரி.
ஈரம்- ஒரு மாலை பொழுதில் என்னுடய முன்று மணி நேரத்தை எடுத்து கொண்டது, எனக்கு தெரியாமல்- என் கண்களையும், மற்ற புலன்களையும் கடத்தி சென்றது.காட்சிகள் முன்னும் ,பின்னுமாக செல்வதயும், கதாபத்திரங்கள் பல்வெறு பரிமாணங்கள் வெளிபடுவதை- அதை ஒரு கோர்வையாக சொல்வது தமனின் இசை தான். இந்த இசயில் கொஞ்சம் தவறு நடந்து விட்டாலும் கூட கேலி கூத்தாக மாறி விடும். உதாரணமாக, முதல் பாதியில் , வாசுவின் காதாலும், வாசுவின் புலன் ஆய்வும் ஒன்றொடு ஒன்றாக பினைந்து இருந்தாலும் , அதை ஒரே கோர்வையாக காட்டி இருப்பது தமன்னின் இசையும், ஒலிபதிவும் தான். நாம் திரை அரங்கை விட்டு வெளியே வந்தால் ,துணியில் ஈரம் ஏற்பட்டதை போல ஒரு பிரம்மை ஏற்படுகிறது.
கதை என்னவென்று பார்த்தால் - ஒரு பெண், பல கொலைகள், அவளின் முன்னாள் காதலன், கணவன், அந்த அபார்ட்மென்டில் குடி இருக்கும் நபர்கள்- சில சந்தேகங்களை தூவி , நடுவில் கொலையாளி யாரென்று கூறி, பின் பாதியில், கால பரிமாணத்தில் பின்னோக்கி சென்று, அதன் காரணமாக முடிவில் ஒரு சின்ன முடிச்சு .syd field in 3- part structure படி தான் திரை கதை இருக்க வேண்டும் என்பதில்லை. சுவார்ஸ்யமாக இருக்க வேண்டும். மக்களை கட்டி போட வேண்டும். காலையில் மனைவியுடன் போட்ட சண்டை மறக்க வேண்டும். அவ்வளவு தான்.பாலா போன்றவர்கள் , கதையில் பெரிய முடிச்சுகள் வைக்க மாட்டார்கள். கதாபாத்திரம்-, அவர்களின் குணாதசியங்கள், இது தான் முடன்மை.. இதற்க்கு மாற்றாக , மணிரத்தினம் அவர்களின் படங்களில் , கதாபாத்திரத்தின் தன்மையை விட காட்ச்சிகளின் கோர்வை தான் பிரதானம். .யோசித்து பாருங்கள்- சேது, நந்தா ( இது கொஞ்சம் விதி விலக்கு) , பிதாமகன், எல்லாவற்றுக்கும் மேலாக நான் கடவுள்-இந்த படங்களில் நமக்கு உடனே நியாபகம் வருட்வது அந்த படத்தில் இருக்கும் மைய்ய கதாபாத்திரங்கள், அவர்களின் குணாதசியங்கள். இதற்கு மாறக , மணிரத்தம் அவர்களின் படங்களில், காட்ச்களின் கோர்வை தான் பிரதானம். ஆனால் இருண்டுமே மக்களை ஐம்பது ரூபாய் செலவழிக்க செய்தது.
ஈரம் படத்தை பொறுத்த வரை - காட்சிகளின் கோர்வையும் சரி, கதாபாத்திரத்தின் குணாதசியமும் சரி , குறிப்பாக பாலு(நந்தா) வின் கதாபாத்திரம் பின் பாதியில் செதுக்க பட்ட விதமும் , அதற்க்கு சரியாக உயிர் கொடுத்த நந்தாவின் நடிப்பும் சரி ,படத்தில் வரும் கொலைகளிருந்தும், புலன் ஆயிவிலிருந்தும் கொஞ்சம் கவனத்தை இழுத்தாலும் , பார்வையாளர்களின் கவனம் படத்தில் மட்டும் இருக்க செய்தது! கவனம்-ஒவ்வரு திரைஅரங்கிலும் , படம் பார்க்கும் அனுபவம் விதியாசம். மாயாஜாலில் பார்த்தால் , கொஞ்சம் கூர்ந்து கவனிக்க முடியும் . நான் பார்த்த்தோ காரப்பாக்கம் அரவிந்தில் - கதாபாத்திரத்தின் ஒவ்வொரு காட்சியும் எப்பொழுதெல்லாம் அவர்களின் , குறிப்பாக கல்லுரி இளைஞர்களின் தினசரி வாழ்கையில் வரும் பேச்சுகளை நினைபடுத்துமோ, அப்பொழுதெல்லாம் ஆர்பரித்தனர், விசில் அடித்தனர். உதாரணதிற்க்கு, பாலாவின் நண்பன், 'பிறர் மனை நோக்கும்' சமாச்க்ரங்களை பற்றி பேசும் போழுது , செம விசில்.
படத்தில் பல்வேறு உணர்ச்சிகள் பிரதிபலிக்கின்றன. தன் காதலியை அவதுறாக பேசுவதை நம்ப முடியாமல் தவிக்கும் வாசு ( மிருகம் ஆதி ,காதலனாகவும் , பின்பு காவல்காரராகவும் கதாபதிரத்தின் இரண்டு கலா பரிமாணத்தை நன்றாக செய்திருக்கிறார்),காதலில் தவித்து , கல்யாணத்தில் மிதந்து, அதில் சந்தோஷபட்டு, விதியும் , சுற்றார்களின் சூழ்ச்சியாலும் மிதக்கும் ரம்யா(சிந்து மெனான்- அற்புதமான நடிப்பு) , பின் பாதியில் வெளிப்படும் சந்தேகம்,கோபம்,பரிதாபம்- இப்படி பல ..இவை எல்லாவறிற்க்கும் அடி நாதம் - ஒலிப்பதிவு. உதாரணமாக , முன் பாதியில், வாசு கார் ஒட்டி கொண்டு பொகும் பொழுது , அவன் நினைவு பின் நோக்கி செல்கின்றன .ஆனால் , ஒலிப்பதிவு, அந்த கொலை நடந்த அந்த அழுத்த்தை நமக்கு நினைவு படுத்தி இருக்கின்றன - மழை மூலமாக,அந்த correct aana color tone மூலமாக .கொலைகள் நடக்கும் விதமும் , அகோரத்தை காட்டாமல், ஒலியும், ஓளியும் மூலமாக காட்டியிருப்பது தூள்.
படம் பார்த்து விட்டு - வெளியே வந்தேன். சொழிங்கநல்லுர்- மேடவாக்கம் 4 கிலோ மீட்டர் சாலை.மழை முடிந்து குளிர்ந்த காற்று வீசியது. என்னுடய முக்கு கன்ணாடியை மாட்டி கொண்டு பைக்கில் புறப்பட்டேன்.நான வேக வேக மாக செல்ல , காற்றும் பலமாக வீசியது.ஒரு ஐந்து நிமிடம் கழித்து , என்னுடய மூக்கு கன்ணாடியில் கொஞ்சம் கொஞ்சமாக பனி மூட ஆரம்பித்தது.சாதாரண விஷியம் தான் . இந்த படத்தை பார்த்த் பின்பு இல்லை . வண்டியை நிறுத்தினேன்.மூக்கு கண்ணாடியை கழட்டி பாக்கேட்டில் வைத்தேன்.