Wednesday, December 23, 2009

Vetti karan



Words stop short of the experience by name 'Vettaikaran' . Inspite of 4 cousins joining after 3 years , 2 kids , fans all around , almost a full house - the movie was a damp squib, easily the worst of the year i have seen. But then there are few points to be noted


1) Henceforth, all Building contractors will approach Vijay - as he with his 3 inch - circumferential handwrists is able to break concrete and smash into pieces. More use of vijay, less cost, no earth movers , buldozers !

2) How stills cheat - anushka is plain bad , be it make up , angles, expressions - she is a big zero nor neither has good screen presence.

3) The movie shuld have been titled 'Birds' - our hero mostly flies , esp in stunts !!

4) I really wonder if the dubbing of all long haired villains is by the same guy - irrespective of the director, the big stupid laugh , long hairs , talks which kill your ears.

5) There is one scene which got the maximum appreciation-When we lost power in the theater, everybody roared with whistles.

6) There was aheavy rush at the theatre , huge fights, shouts , gate crashing - all happened , not at the start but at the end to escape from the theater.

7) Despite different religion, caste , creed, everybody had the same opinion ' Most movie of the year'

8) The balcony was full - later i realised that most people who watched were the ones who old puffs, ice creams in thesame theatre.

9) Movies like these have something useful- people buy watches to know know how precious your time is !

Sunday, November 15, 2009

Kandaen Kadhalai Review


காதலை மைய்யமாக வைத்து எடுக்க பட்ட படங்களை நான் பொதுவாக பார்ப்பதில்லை. அதில் கதாபாதிரங்கள் கேலி சித்திரமாக இருக்கும். உண்மை இருக்காது. எதார்த்தம் இருக்காது. திரை கதையில் முடிச்சுகள் இருக்க வேண்டுமென்பாதற்க்காக கதாபாதிரத்தின் தன்மை மாறும்.இங்கே பிரச்சனை எதார்த்தம் தான். இப்படியும் நடுக்குமோ யென்று திரை அரங்கில் யோசிக்க வைத்து விட்டால் அந்த படம் பப்படம் தான். அவன் யோசிக்காதவாறு அமேரிக்காவில் ஒரு பாடல், வடிவேலின் ஹாஸ்யம், கயறு போட்டு சண்டை - இப்படி கவனத்தை திருப்பி சரி செய்வார்கள்.

இதில் விதிவிலக்காக சில படங்கள் - உதாரணமாக 'காதல்' திரைப்படம். திராவிட நிறம் உள்ள இருவர் காதலை இந்த 2000ல் சுவையாக சொல்ல முடியுமென்பதை நிருபித்த படம்.எதார்த்தை மீறும் பொழுது சில மேல சொன்ன சில ஒட்டல்கள் தேவை படுகின்றது. இந்த படத்தில் அஞ்சலி ( தமன்னா- 1990ல் ஜோதிகா நடித்திருப்பார்)கதாபத்திரம் நிஜ வாழக்கயில் நாம் பார்க்க முடியுமா ? இதில் பிரச்சனை எதை எதார்த்த்மென்று சொல்கிறோமென்பதை பொறுத்து தான் அமையும். இது என்ன முட்டாள் தனமாக இருக்கிறது ( இதை விட சந்தோஷ் சுபிரமணியம் படத்தில் வரும் ஜேனீலீயாவின் கதாபாதிரம் மிகவும் முட்டாள் தனமாக இருக்கும் ) யென்று யோசிக்கும் முன்பே அதற்க்கு விடை கிடைத்து விட்டது - எனக்கு இரண்டு இருக்கை தள்ளி உட்கார்ந்து இருக்கும் ஒரு அம்மணியிடம் . கிட்டதட்ட அஞ்சலி காதபாதிரத்தின் பிம்பமாக தான் நடந்து கொண்டார். காதாலில் தோல்வியுற்ற ஷக்தியும் ( பரத்,உயரம் கொஞ்சம் கூட இருந்தால் கச்சிதமாக இருக்கும் ) , அந்த அந்த தருணத்தை முழுமையாக , குதுகோலமாக கொண்டாடும் அஞ்சலியும் ஒரு ரயில் பயணத்தில் ( வழக்கம் போல ) எதேச்சையாக சந்திக்கின்றனர்.அதில் இருந்து அவ்ர்களின் வாழ்க்கை மாறி , காதல் புகுந்து என்னா ஆகிரதென்பது தான் கதை.


இந்த மாதிரி கதைகளில் - கதாநாயகன், நாயகி அழகாக தான் இருக்க வேண்டும். அந்த ஜோடி கார், பஸ், பாடல், ரயில் பயணம் - இப்படி பல விஷயங்களில் நடுவே காதல் முளைக்க வேண்டுமென்றால் , அழகாக தான் இருக்க வேண்டும்.அந்த வகயில் கச்சிதமாக பொருந்துகின்ரனர். பரத்தின் மனமாற்றமும்,வெண்பஞ்சு பாடலும் ( வித்யாசாகர் ,) கச்சிதமாக பொருந்துகிரது. ஒரு அழகான, உற்ச்சாகம் சுற்றி வரும் ஒரு பெண்ணுடன் சில நாட்க்கள் கழித்தால் , அவள் மீது , இன்னொருவரை அவள் காதலித்தாலும் , ஒரு ஈர்ப்பு வருமென்பதை ஒளிவு மறைவில்லாமல் சொல்லியுள்ளார். இதை ரோஜாகூட்டம் படத்தில் ஸ்ரீகாந்த் காதபாதிரத்துடன் ஓப்பிட்டு பாருங்கள் , அதில் உள்ள செயர்க்கைதனம் ந்ன்றாக தெரியும்.

ஆனால் , பிரச்சனை இங்கு தான் ஆரம்பிகிறது- எப்படி எடுத்து செல்ல வேண்டுமென்பதில் கொஞ்சம் குழப்பம் உள்ளது போன்று தோன்றுகிறது. இந்த குழப்பம் ' காதல் செய்கிறேன், ஆனால் அவள் இன்னோருவரை காதலிக்கிறார்' - இதை கையாழ்வதில் நமது விக்கிரமனின்வழியை ஏடுக்கிறார்( வேறென்ன , அவள் காதல் ஒன்று செய்வதற்க்கு, இதயத்தை கிழித்து முயற்ச்சி செய்வது). இங்கு தான் எனக்கும் படதிற்க்கும் தூரம் ஆரம்பிக்கிறது.ஒரு படத்திலாவது உணர்ச்சிகளை வெளிபடுத்தும் கதாபாதிரமாக யாராவது வடிவமைக்க மாட்டார்களா? இல்லை , இந்த குழப்பம் தான் யதார்த்தமா ?இந்த இடத்திலிருந்து பாடல் ,mistaken identity, ஜல்லி காரணதிற்காக உண்மை சொல்ல முடியாமல் போவது , பல பல படங்களில் பார்த்து , துவைத்து போன காட்ச்சிகள் தான்.

jabe we met நான் பார்த்ததில்லை. வெறும் காட்சிகள்- திருப்பு முனை வைத்து நகரும் திரைகதைகளில், முதன்மை கதாபாதிரமேற்று நடிக்கும் நடிகர்களின் ஆயாச நடிப்பில் தான் பார்வையாளர்களை கவர முடியும். அந்த விதத்தில், பரத்தும், தமன்னாவும் அருமையாக நடித்துள்ளனர். கொஞ்சம் கொஞ்சம் மணிரத்தினத்தின் கதாபாதிரத்தின் சாயலில் அஞ்சலி கதாபாதிரம். கொஞ்சம் தவறி நடித்தாலும் முட்டாள்தனமாக அமைந்து விடும். அந்த விதத்தில் ,தமன்னாவிற்க்கும், அவர்களுக்கு dubbing கொடுத்த அம்மணிக்கும் பாராட்டுக்கள்.காதலும் , தவிப்பும் , உணர்ச்சிகள் அடக்கம் - இப்படி மாற்றி மாற்றி வருவதால் வித்யாசாகர் தன் திறமையை பாடல்களுடன் நிறுத்தியுள்ளார், பின்னனி,பின்னனி தான்.

உண்மையான காதல் படதிற்க்கு காத்து கிடக்க வேண்டும்.

Saturday, November 14, 2009

Paa - Music review




'பா' பட பாடல்களை கேட்டு கொண்டு இருக்கும் பொழுது , எனக்குள் பல கேள்விகள் எழுந்தன ? குறிப்பாக ஒரு இசையமைப்பாளரின் ரசிகனாக இருந்து கொண்டு , இசையை , எதிர்பார்ப்பு இல்லாமல் , ஏதேச்சையாக ஒரு அருவி தென்பட்டு அதை பார்த்து ரசிப்பதை பார்க்கும் விதமாக ரசிக்க முடியுமா? கொஞ்சம் கஷ்டம் தான். இப்படி இசையை பருகுவது, நமது இசை உடம்பிற்க்கு நல்லதா ? இதே பாடல்களை ஒரு இரண்டு வாரத்திற்க்கு பிறகு கேட்டால் எப்படி இருக்கும்?இன்னும் ரசித்து இருக்க முடியுமோ?

பல வித எதிர்ப்பார்ப்பு - இளைய ராஜா வட இந்திய ரசிகர்களை கவருவாரா ? அவருடய இசை, வெகு ஜன மக்களின் iPodல் ஒலிக்கும்மா ? கொஞ்சம் கவலையும் , எதிர்ப்பார்ப்புடன் தான் இந்த பட பாடள்கலை அனுகினேன். குறிப்பாக இந்த வருடத்தில் வந்த அவரின் பாடல்கள் கொஞ்சம் நம்பிக்கை தந்தது.குறிப்பாக வால்மீகி, பழசி ராஜா நன்றாக இருந்தன. மனதில் ஒட்டின.பல வருடங்களாக ராஜாவின் திறமை குறைந்துவிட்டதென்று சில பேர் கூறுகின்றனர்.அவருடய synth usage தான் ரொம்ப மோசமென்று சில பேரின் அபிபராயம்.அவருக்கு பெரிய படங்கள் கிடைக்க வில்லை - சேது, ஹேய் ராம் , விருமாண்டி பாருங்கள்- பழய ராஜவை பார்க்கலாமென்பது இன்னோரு வாதம்.

பா- முளையும் , மனதும் , கணித விதி படி வயதும் பதினைந்தை தாண்டாமல், உடம்பு மட்டும் அறுபதை தாண்டினால் என்ற சுவையான கரு. இதற்கு ராஜாவின் இசை படதிற்கு பக்க பலமாகவும் , அவரின் இசை ரசிகர்காளின் எதிர்ப்பார்ப்பிற்க்கு பலமாகவும் இருக்க வேண்டும். அதை ' மூடி மூடி' பாடல் பக்காவாக பூர்த்தி செய் கிறது. முதல் interlude ல் வரும் இசை , அவரின் இசை நரைக்க வில்லையென்பதை காட்டுகிறது. ஷில்பா ராவின் குரல் ந்ன்றாக இருக்கிறது.பாடல் முழவதும் ஒரு jazz feel இருக்கிறது. ஒரு பாடல் நவீனமாக இருக்க , jazz ஐ பயன் படுத்து கிறார்கள்.தவறு இல்லை .இதை வைத்து மட்டும் synth usage ந்ன்றாக இருக்கிரதென்று சொல்ல முடியாவிட்டாலும், முந்தய பாடல்களை விட பல படிகள் தாண்டி சுவையாக இருக்கிறது.


இதை அதிகாரமாக சொல்ல முடியாது - 'கும் சும்' போன்ற மெட்டுகளை ராஜாவால் தான் போட முடியும் ( கில்லி படதிற்க்கு பிறகு பல மொழிகள் பார்த்த ஒரு விஷயம் இந்த பாடல் தான் .). இந்த பாடலை அப்படியே பியானோவில் வாசித்து பாருங்கள் , அல்லது என்னை மாதிரி வெறும் கையில் மொழம் போட்டு விட்டு கற்பனை பண்ணி பாருங்கள். ஒரு பீதோவனும் , மோஸொர்டும் வருவார்கள். இந்த பாடலில் , குறிப்பாக , இரண்டாம் interlude ல் இலவசமாக jazz பியனோ கச்சேரிக்கு அழைத்து சொல்லுகின்றனர். குழந்தைகளுக்கு பாடுவதில் பேர் பெற்ற நமது பவதாரினி, சரணத்தை , மேல சொன்னதை நிருபிக்கும் வகை பாடியுள்ளார்.இந்த பாடல்களை இரடடை கிழவி போன்ற சொற்க்கள் நிறய வருகின்றன, நல்ல அலங்காரமாக அவை இருக்கின்றன.

கடந்த இருபது வருடமாக ஒரு ஆராய்ச்சி நடுக்கிறது. ஒவ்வோரு ராகமும் எந்த உணர்ச்சியை வெளிபடுத்தி கின்றதென்பதை.இதனை இளைய ராஜா ஓப்பு கொள்ள வில்லை . ஆவரை போறுத்த வரை , ஒருராகம் எப்படி வேண்டாலும் பயன் படுத்த முடியும்- அது அந்த இசையமை பாளரின் ஷிருஷ்டி யை பொறுத்து இருக்கிறது.உதாரணதிற்க்கு , எஜமான் படத்தில் வரும் ' ஒரு நாளும்' பாடல் ஒரு பக்தி பாடல் யென்பதை எவ்வளவு பேருக்கு தெரியும் . ஜானகியை எடுத்து , சுதா ரகு நாதானையும் , கொஞ்சம் chordsai மாற்றி கற்ப்பனை பண்ணி பாருங்கள். அதே தான் - புத்த்ம் புது காலை பாடலும் . ஒரு இரவில் ஒரு காதலன் தனக்கு முத்தம் கொடுத்து விட்டால் , மறு நாள் காலை அந்த பெண் மொட்டு எப்படி உணர்வாளோ அந்த உணர்வை தான் என்னால் கற்ப்பனை செய்ய்ய முடிகிறது. ஆனால் , இதில் - ' ஹல்கே செ ' வை கேட்டால் , முதலில் ஏமாற்றமும் , அதை தொடர்ந்து , ஆச்சர்யமும் தான் வருகிறது. பா படதில் , அந்த சிறுவன் இறந்து , இந்த பாடல போடாமல் இருந்தால் சரி - அப்படி போட்டு விட்டால் , அழுகை ஆறு தான் ஒடும் ( progeria வினால் அவதி படும் மனிதர்கள் இருபது வயது மேல் வாழ்வதில்லை . youtube ல் ஒரு விடியோ பார்த்து விட்டு அழுதேன்.ஊதாரணதிற்க்கு ஒரு தாய் progeria வந்த தன் சிறுவன் பற்றி சொல்கிறாள் ' he has started losing teeth now .. i Guess that shouldn't be a problem , as he doesn't like dஎன்டிஸ்ட்'-எப்படி பட்ட எண்ண ஒட்டங்கள் ஒட வேணுமென்பதை இன்னும் குழப்பிகிறது, வாழ்க்கயை விடையிலிருந்து வினாவிற்க்கு தள்ளுகிறது )

"தாய் எட்டு அடி பாய்ந்தால் .." பழ மொழி யருக்கு பொருந்துமோ, என் கார்த்திக் ராஜாவிற்க்கு பொருந்தாத்ன்று வலையில் பல பேர் பின்னியுள்ளனர்.எல்லாரும் ஒரு வகையில் இசை போட்டால் , இவர் இன்னொரு மாதிரி போடுவார். ஆனால் , எனக்கு இது தான் பிடித்திருந்தது. இப்பொழுது எடுத்து கொள்ளுங்கள். யுவன், பிரகாஷ், தரன் , இமான்,ப்ரெம்ஜி - இவர்களின் இசை வடிவில் என்ன வித்தியாசம் இருக்கிறது - ஒருவர் அதே இசை வடிவத்தில் நன்றாக போடுகின்றார், மற்றொருவர் சுமாரக . அவ்வளவு தான் . ஆனல் வடிவம் ஒரே மாதிரி தான் இருக்கிரது ( யுவன் இந்த கூட்டதில் முன்னோடி) . படம் பல இல்லாமல் இருக்கம் கார்திக் , 'ஹிச்கி ஹிச்கி' பாடலின் பின்னனி சேர்த்துள்ளாறென்று நினைகின்றேன். அவர் இசையில் தான் தனியாக சில இசை துளிகள் தனியாக தெரியும் , பாடலின் முதன்மை ராகதிலும் , இசை சேர்ப்பிலும் சரி - வெகு ஜன மக்களுக்கு பிடிக்கத மாதிரி இருக்கும் , கொஞ்சம் நிறய தடவை கேட்டால் , பிடித்து விடும் . குறிப்பாக முதல் interlude கேட்டு பாருங்கள்- அது முடியும் விதமும் , இரண்டாம் interlude , தனியாக இசை செருபு உள்ள இரண்டாம் சரனம் - இது கார்த்திகின் அடையாளம். அடித்து சொல்லுவேன். இந்த பாடலில் second interlude ல் திடீரென்று , பா தீம் மியுசிக் வருகிரது . ஒரு வேலை இந்த பாடல், காதல் கடந்து , காமம் புகுந்து , அந்த அன்பில் பிறக்கும் குழந்தையை குறிகின்றதோ ? மொத்ததில் பாடல் பிடித்திருந்து.

யாருக்கும் தெரியமால் ஒரு முத்து இருந்தது. பாலு மகேந்திரா அவர்களின் அது ஒரு கனா காலம் படத்தில் - "காடு வழி " பாடல். அதை ஒரு 14 வயது பயன் குரலில் அமுக்கி பாடியுல்ளார் அமிதாப். காட்ச்சியுடன் ஒட்டி உல்ள காரந்த்தினால் , நடுவில் வரும் செல்டிக் இசையை தவிர பெரிதாக கவர இல்லை. இருந்தாலும் , படதில் மிக ந்ன்றாக இருக்குமென்பது என்னுடய அனுமானம்.இந்த பாடலை re-mix பன்ணிய விதம் பிடிக்கவில்லை.

படம் வரட்டும் .பால்கி நன்றாக எடுத்து இருப்பரென்ர் நினை கின்றேன். ராஜாவின் பின்னனி சேர்ப்பை சத்தியம் திரை அரங்கில் பார்க்க வேண்டும்.

Saturday, September 19, 2009

EEram - Get wet soon !



படம் பார்ப்பதே ஒரு சுவையான அனுபவம்.நம் நடிகரின் படமென்றால் கொஞ்சம் எதிர்ப்பார்ப்புடனும், அவர் அற்புதமாக நடித்தால் திரை அரங்கில் ஆர்ப்பரிக்க வேண்டுமென்ற ஆசையும், படம் சொதப்பிவிடுமோ என்று பயமும்,போன்ற பல உணர்வுகளுடன் பார்க்கும் அனுபவம். இயக்குனருக்கு, அவர் மனதில் நினைத்த கதை வர வேண்டும், அடுத்த படம் இயக்கும் அளவிற்க்கு திரை அரங்கில் கூட்டம் குவிய வேண்டும், இப்படி இப்படி காட்சிகளை நகர்த்தினால் பார்வையாளர்கள் கடிகாரத்தை பார்க்காமல் இருக்க மாட்டார்கள்- என்ற திரை கதை வேண்டும். முடிவாக பார்ப்பவர்களுக்கு ' கொடுத்த காசுக்கு டைம் பாஸ்' ஆக வேண்டும்- கலை படமாக இருந்தாலும் சரி, மசாலா படமாக இருந்தாலும் சரி.

ஈரம்- ஒரு மாலை பொழுதில் என்னுடய முன்று மணி நேரத்தை எடுத்து கொண்டது, எனக்கு தெரியாமல்- என் கண்களையும், மற்ற புலன்களையும் கடத்தி சென்றது.காட்சிகள் முன்னும் ,பின்னுமாக செல்வதயும், கதாபத்திரங்கள் பல்வெறு பரிமாணங்கள் வெளிபடுவதை- அதை ஒரு கோர்வையாக சொல்வது தமனின் இசை தான். இந்த இசயில் கொஞ்சம் தவறு நடந்து விட்டாலும் கூட கேலி கூத்தாக மாறி விடும். உதாரணமாக, முதல் பாதியில் , வாசுவின் காதாலும், வாசுவின் புலன் ஆய்வும் ஒன்றொடு ஒன்றாக பினைந்து இருந்தாலும் , அதை ஒரே கோர்வையாக காட்டி இருப்பது தமன்னின் இசையும், ஒலிபதிவும் தான். நாம் திரை அரங்கை விட்டு வெளியே வந்தால் ,துணியில் ஈரம் ஏற்பட்டதை போல ஒரு பிரம்மை ஏற்படுகிறது.

கதை என்னவென்று பார்த்தால் - ஒரு பெண், பல கொலைகள், அவளின் முன்னாள் காதலன், கணவன், அந்த அபார்ட்மென்டில் குடி இருக்கும் நபர்கள்- சில சந்தேகங்களை தூவி , நடுவில் கொலையாளி யாரென்று கூறி, பின் பாதியில், கால பரிமாணத்தில் பின்னோக்கி சென்று, அதன் காரணமாக முடிவில் ஒரு சின்ன முடிச்சு .syd field in 3- part structure படி தான் திரை கதை இருக்க வேண்டும் என்பதில்லை. சுவார்ஸ்யமாக இருக்க வேண்டும். மக்களை கட்டி போட வேண்டும். காலையில் மனைவியுடன் போட்ட சண்டை மறக்க வேண்டும். அவ்வளவு தான்.பாலா போன்றவர்கள் , கதையில் பெரிய முடிச்சுகள் வைக்க மாட்டார்கள். கதாபாத்திரம்-, அவர்களின் குணாதசியங்கள், இது தான் முடன்மை.. இதற்க்கு மாற்றாக , மணிரத்தினம் அவர்களின் படங்களில் , கதாபாத்திரத்தின் தன்மையை விட காட்ச்சிகளின் கோர்வை தான் பிரதானம். .யோசித்து பாருங்கள்- சேது, நந்தா ( இது கொஞ்சம் விதி விலக்கு) , பிதாமகன், எல்லாவற்றுக்கும் மேலாக நான் கடவுள்-இந்த படங்களில் நமக்கு உடனே நியாபகம் வருட்வது அந்த படத்தில் இருக்கும் மைய்ய கதாபாத்திரங்கள், அவர்களின் குணாதசியங்கள். இதற்கு மாறக , மணிரத்தம் அவர்களின் படங்களில், காட்ச்களின் கோர்வை தான் பிரதானம். ஆனால் இருண்டுமே மக்களை ஐம்பது ரூபாய் செலவழிக்க செய்தது.

ஈரம் படத்தை பொறுத்த வரை - காட்சிகளின் கோர்வையும் சரி, கதாபாத்திரத்தின் குணாதசியமும் சரி , குறிப்பாக பாலு(நந்தா) வின் கதாபாத்திரம் பின் பாதியில் செதுக்க பட்ட விதமும் , அதற்க்கு சரியாக உயிர் கொடுத்த நந்தாவின் நடிப்பும் சரி ,படத்தில் வரும் கொலைகளிருந்தும், புலன் ஆயிவிலிருந்தும் கொஞ்சம் கவனத்தை இழுத்தாலும் , பார்வையாளர்களின் கவனம் படத்தில் மட்டும் இருக்க செய்தது! கவனம்-ஒவ்வரு திரைஅரங்கிலும் , படம் பார்க்கும் அனுபவம் விதியாசம். மாயாஜாலில் பார்த்தால் , கொஞ்சம் கூர்ந்து கவனிக்க முடியும் . நான் பார்த்த்தோ காரப்பாக்கம் அரவிந்தில் - கதாபாத்திரத்தின் ஒவ்வொரு காட்சியும் எப்பொழுதெல்லாம் அவர்களின் , குறிப்பாக கல்லுரி இளைஞர்களின் தினசரி வாழ்கையில் வரும் பேச்சுகளை நினைபடுத்துமோ, அப்பொழுதெல்லாம் ஆர்பரித்தனர், விசில் அடித்தனர். உதாரணதிற்க்கு, பாலாவின் நண்பன், 'பிறர் மனை நோக்கும்' சமாச்க்ரங்களை பற்றி பேசும் போழுது , செம விசில்.

படத்தில் பல்வேறு உணர்ச்சிகள் பிரதிபலிக்கின்றன. தன் காதலியை அவதுறாக பேசுவதை நம்ப முடியாமல் தவிக்கும் வாசு ( மிருகம் ஆதி ,காதலனாகவும் , பின்பு காவல்காரராகவும் கதாபதிரத்தின் இரண்டு கலா பரிமாணத்தை நன்றாக செய்திருக்கிறார்),காதலில் தவித்து , கல்யாணத்தில் மிதந்து, அதில் சந்தோஷபட்டு, விதியும் , சுற்றார்களின் சூழ்ச்சியாலும் மிதக்கும் ரம்யா(சிந்து மெனான்- அற்புதமான நடிப்பு) , பின் பாதியில் வெளிப்படும் சந்தேகம்,கோபம்,பரிதாபம்- இப்படி பல ..இவை எல்லாவறிற்க்கும் அடி நாதம் - ஒலிப்பதிவு. உதாரணமாக , முன் பாதியில், வாசு கார் ஒட்டி கொண்டு பொகும் பொழுது , அவன் நினைவு பின் நோக்கி செல்கின்றன .ஆனால் , ஒலிப்பதிவு, அந்த கொலை நடந்த அந்த அழுத்த்தை நமக்கு நினைவு படுத்தி இருக்கின்றன - மழை மூலமாக,அந்த correct aana color tone மூலமாக .கொலைகள் நடக்கும் விதமும் , அகோரத்தை காட்டாமல், ஒலியும், ஓளியும் மூலமாக காட்டியிருப்பது தூள்.

படம் பார்த்து விட்டு - வெளியே வந்தேன். சொழிங்கநல்லுர்- மேடவாக்கம் 4 கிலோ மீட்டர் சாலை.மழை முடிந்து குளிர்ந்த காற்று வீசியது. என்னுடய முக்கு கன்ணாடியை மாட்டி கொண்டு பைக்கில் புறப்பட்டேன்.நான வேக வேக மாக செல்ல , காற்றும் பலமாக வீசியது.ஒரு ஐந்து நிமிடம் கழித்து , என்னுடய மூக்கு கன்ணாடியில் கொஞ்சம் கொஞ்சமாக பனி மூட ஆரம்பித்தது.சாதாரண விஷியம் தான் . இந்த படத்தை பார்த்த் பின்பு இல்லை . வண்டியை நிறுத்தினேன்.மூக்கு கண்ணாடியை கழட்டி பாக்கேட்டில் வைத்தேன்.

Saturday, July 11, 2009

நான் கற்ற பாடம்

வலைபூவில் எழுதி இரண்டு மாதம் ஆகி விட்டது. வேலையில் எல்லா பொறுப்பையும் தலை மேல் போட்டு கொண்டால் என்ன ஆகுமென்று நன்றாக தெரிந்து விட்டது.நான் கற்ற சில பாடங்கள்.

1) வேலையில் வெற்றி வர வர வாழ்க்கையில் இது மட்டும் போதுமென்றும் , மற்ற் விஷயங்களை இந்த தற்காலிக வெற்றிகள் பார்த்து கொள்ளுமென்ற ஒரு நினைப்பு வரும்.

2) இரவில் ஒரு மாததிற்க்காக மேலாக இரவு இரண்டு மணி மேலாக வேலை செய்தேன். இரவில் இரண்டு வாகனம் ஒட்டும் போது பாதி தூக்க கலக்கம் தான். ஒரு நாய் இடையில் வந்தால் கூட ஒரு சில விரல்கள் போகும் வரைக்காவது விபத்து ஏற்ப்பட்டிருக்கலாம்.

3)இரவில் வீட்டுசாப்புடு சாப்பிடாமல் , ஹோட்டலில் , அந்த ஹோட்டல் முதலாளி கூட சாப்பிடாத உனவை தான் சாபிட்டேன். முதலில் நெய் ரொஸ்ட் நன்றாக தான் இருந்தது. ஒரு மாதம் கழித்து , வயிரை கிழிக்க ஆரம்பித்து விட்டது.

4) கடினமாக உழைப்பில் கிடைக்கும் தாற்காலிக வெற்றியில் , என் உள்ளே இருக்கும் மற்ற கலை திறமைகள் முச்சு திணர, நுரை தத்த சாகடிக்க பட்டுள்ளது. முன்பு கதை எழுத வேண்டுமென்று தினசரி பேப்பர் படிப்பேன். இப்பொழுது அதற்க்கு கூட பேப்பரை தொடுவதில்லை.

5) முக்கியமாக குடும்பத்தில் உறவுகள் பாதிக்க படும். அழகான ஒரு வயது தேவதைவீட்டிலிருப்பது மறந்து விட்டது. மின்சார கட்டணம் முதல் , என் வண்டியியை துடைக்கும் எனது அறுபது வயது அப்பாவும் , அவரது உழைப்பும் புத்தியில் தங்க வில்லை.

6)இரவு பத்து மணிக்கு வந்து விட்டாலும் , தினமும் இரண்டு மணிக்கு தூங்குனம் பழக்கம் ஏற்பட்டு விட்டதால் , தூங்க முடியவில்லை . உடம்பில் அசதி , கண் உலகை மற்ற முயர்ச்சி செய்கின்றது.

7) இவவளவும் உழைத்த பின்பு நீ உழைப்பது பத்தாதென்று சொலுவர்கள். போதுமடாசாமி !!!

Thursday, April 23, 2009

முடிகிட்டு போ !


இலங்கையில் உள்ள அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்கும் போரினை நிறுத்த ஒரு நாள் வாழ்க்கையை, இங்கு நமது முதல் அமைச்சர் நிறுத்தியுள்ளார்.இது சரியா தவறா என்பது அப்புறம். சரியென்று வைத்து கொண்டால் கூட , எப்படி சரி ? இப்பொழுது பாராளுமன்ற தேர்தல் நடக்கின்றது. அதனால் மத்தியில் உள்ள நமது 'ஹம். ஆப்கே ஹே கவ்ன்' அரசியல்வாதிகள், இதை கண்டிப்பாக கண்டுகொள்ள மாடார்கள். அப்படியே இருந்தாலும் , எதோ காது நோண்டுவதற்க்காக இலங்கை அதிபரை எச்சில் அறிக்கை செய்வார்கள். இலங்கை போயி ஒரு மசால் வடை சாப்பிட்டு வருவார் நமது பிரானாப் முகர்ஜி.இதை ஒரு பெரிய மயிராட்டம் தினகரனில் சாதனையாக போடுவார்கள்.இவ்வளவு தான் நடக்கும். ஐம்பது வருட போரை ஒரு பந்தை வைத்து நிறுத்த முற்ப்பட்டால்?

இதில் இன்னொரு கூத்து இருக்கிறது. இலங்கையில் பொது மக்கள் LTTE யில் பிடியிலிருது வெளியேறி வருகின்றனர். சுமார் 60000 மக்கள் இது வரை வெளியேறி பாதுக்காபான இடத்துக்கு கொண்டு செல்ல பட்டனர். அதில் வெளியான செய்திகளில், புலிகள் தங்களை கேடயமாக பயன் படுத்தியதாக கூறியள்ளனர். இதற்கு நமது புலி ஆதரவாளார்கள் என்ன சொல்லுகின்றனர்? இந்த மாதிரி செய்தி வரும் போழுது அமைதி தான் . சோ மட்டும் அதை பற்றி எழுது வார் . ஆ,வி, குமுதம் யெல்லாம் அமைதி தான்.இதை வைத்து புலிகளை கண்டிக்க வேண்டுமென்று சொல்ல வில்லை. ஆனால் இது பொய்யென்று கூட யாரும் சொல்ல வில்லை!

சரி , இந்த பந்த் தவறென்றால் என் தவறு ? ஒரு பந்த் நடத்தினால் யாரெல்லாம் அவதிக்கு உள்ளாகின்றனர்? நமது பொது மக்கள் தான். பல கோடி வருவாய் நமது அரசுக்கும், சில பல தனியார் நிறுவனதிற்க்கும் தான் . இலங்கயில் நடக்கும் போருக்கு நாம் என் நஷ்டம் அடய வேண்டும் ? அப்படியே ஏதாவது செய்ய்ய நினைதால் நஷ்டம் வராமல் ஏதாவது செய்ய்யலாமே? அவசரதிற்க்கு ஆட்டோ கூட கிடைக்க வில்லை . இன்டர்னெட் இணைப்பை கூட ஆறு மணி வரை துண்டித்து உள்ளானர். என்ன சார் நியாயம் ?ஆனால் ஒன்று -நமது IT யில் பணி புரியும் நன்பர்கள் இதை வரவேற்க்கின்றனர். ஒரு நாள் விடுமுறை ஆயிற்றே! வியாழனுக்கு பதில் சனி வர சொல்லிய்ருக்கின்றனர்.எப்படியும் சனி கிழமைகளில் வேலை செய்ய்ய வேண்டும் . அதனால பரவாயில்லை


PS : இரண்டு நல்ல விஷயங்கள்.

1. இந்த பந்திலும் வீட்டில் உள்ள குப்பைகளை எடுத்து கொண்டு போகும் ஆட்கள் வந்தனர். எனக்கு உண்மையில் அவர்களின் கடமை உணர்ச்சி புல்லரிகின்றது . அவர்களுக்கு சம்பளம் இன்னும் கொஞ்சம் கூட தர வேண்டும்!

2. வாய் கிழிய பேசும் நமது மர மண்டை தமிழர்களுக்கு மத்தியில், ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் இலங்கை சென்று அங்குள்ள தமிழர்க்ளை காண சென்றுள்ளனர். பகுத்தறிவு கொழுந்தான வீரமணி , ஞானி இதை பற்றி ஒன்றும் சொல்லும் மாட்டார்கள்.

Sunday, April 19, 2009

அயன், IPL, அரசியல் கூத்து

நம் நாட்டின் மாடு சூடா மன்னர் இன்று காங்கிரஸ் மேல் ஒரு குண்டை வீசி இருக்கிறார். 1992 வில் நடந்த பாபர் மசுதி இடிப்பிற்கு காங்கிரஸ் உடந்தை - அதாவது , அப்போழுது பிரதம மந்திரியாக இருந்த நமது மொனலிசா நரஸிம்ம ராவ் பாபர் மசுதி இடிக்க படுமென்று தெரிந்தும் ஒன்றும் பண்ணவில்லை.இது ஏற்க கூடியதாக இல்லை . எல்.கே.அத்வானி அவர்களே இதை ஏதிர்பார்திருக்க மாட்டார்.பத்தியாயிரம் , உணர்வு ததும்பும் மக்கள் ஒரு இடத்தில் ஒன்று கூடினால் , அங்கு என்ன நடக்குமென்று யாருக்கும் தெரியாது-குஜராத்தில் நடந்ததை போல . ஆனால் இப்படி அவர்களை உணர்ச்சி வச படி பேசியது பா.ஜா.காவின் சில தலைவர்களாக இருக்கலாம். சரி , இந்த விஷியத்திற்க்கு வருவோம். நமது லொள்ளு லாலு ஜி , பிரதம மந்திரியை பார்த்து அதிகம் பேச வேண்டாம் , அப்படி பேசினால் , இது போன்ற ரகசியங்களை சொல்ல வேண்டியிருக்கும் யென்று ஏச்சி அரித்து உள்ளார். ஐந்து ஆண்டு காலமாக இரயில்வே மந்திரியாக இருந்த போழுது, இது தெரிய வில்லை . அதுவும் நம்ம பச்ச புள்ள மன்மோஹன் SINh பார்த்து! ஆனால இதை பற்றி நாம கவலை பட வேண்டாம் . நோக்கியா ....மன்னிக்கவும்,சோனியா காந்தி மீது நம்பிக்கை இருக்கிறதென்று கூரி விட்டு , இரண்டு அமைச்சர் பதவி வாங்கி கொண்டு காங்கிரஸ் ஆட்சி வர நமது மாட்டுகார வேலன் உதவி செய்வார்.

***
இன்று IPL 2 வில் பஞ்சாப் அணியினரும் தில்லி அணியினரும் மோதி முடிந்த வரை நம்மை அவமான படுத்தினர்.20-20 யென்பதே ஒரு சுருக்க பட்ட புது முயற்ச்சி. அதிலும் மழை காரணமாக ஒரு அணி 12 ஒவர் பெட் செய்வதும் , மறுபடியும் மழை வந்து அடுத்த அணி வெறும் 7 ஒவர் விளையாடுவதும் லூசு தனமாக இருக்கிறது.முடிந்த வரை IPL பார்க்காதிர்கள். இப்பொழுது உள்ள பொருளாதார நிலைமயில் , எதாவ்து படிக்கவும். உங்களுடய மெள் அதிகாரிக்கு சோப் போடவும். அதுவும் இல்லயென்றால் காண்டம் வாங்கி கொண்டு வீடிற்க்கு போகவும் . எதாவ்து ஒன்று உருப்புடும்.

***

ஒரு வாரம் முன்பு அயன் பார்த்தேன். தமன்னாவின் உதடு , ஹாரிஸ் பாடல்கள், சுர்யாவின் திறமையான நடிப்பு , ஜகனின் ஹாஸியம் , வில்லனை தவிர எல்லாம் நன்றாக இருந்தது.குறிப்பாக அந்த ஆப்ப்ரிக்க சண்டை காட்சியின் வேகமும் , அழகான இருவர் நடுவே காதல் வளரும் விதமும், படம் பார்ப்பவர்களின் கவனத்தை தம் மிலிருந்து திரைக்கு கொண்டு வருகிறது.ஆனால் , அந்த வில்லன் ? இந்தியில் வசனத்தை பேசி , தமிழில் அதை டப் செய்து ,தமன்னாவிற்க்கு போட்டியாக முடி வளர்த்து , ஹாரிஸை விட்டு ஒரு செல்லோ பின்னனி இசையை கொடுத்தால் போதுமா? ஒரே ஒரு இடத்தில் , அவர் முதலில் கஞ்சாவை தொட்டு கொள்ளும் போழுது மட்டும் அவர் கதாபத்திரம் அழுத்தமாக பதிகிறது.மற்றபடி , மஹாபாரததில் அரக்கனின் கதாபாத்திராத்தில் எவ்வள்வு அழுத்தமோ, அதில் பாதி தான் இந்த வில்லனுக்கு.இந்த படத்தில் ம்ற்றொரு நல்ல விஷியம் , ஜெகனின் கதாபாத்திரம் தான் . முன் பகுதியில் , ஹாஸியதிற்க்கும், பின் பகுதியில் , சென்டிமென்டிற்க்கும் நன்றாக ஒத்து வருகிறார். சந்தானதிற்க்கு நல போட்டி.

1+1=2 போன்று நல்ல லாஜிக் உள்ளது , சண்டை காட்ச்சிகளிலும் கூட - சினிமாவின் விதிகளுக்கு உட்பட்டு! ஆக மோத்தம் முன்று மணி நேரம் நல்ல டைம் பாஸ்!!!!

Thursday, March 26, 2009

Pasanga - coming of Age

நிலா காய்கிறது போன்று ஆரம்பித்து , உழவன் , தாஜ்மஹால் இசையை நினைவு படுத்தி பாலமுரளி கிருஷ்ணாவின் குரலில் மிதக்கிறது 'அன்பாலே' பாடல் . பால முரளி அவர்களின் குரல் கொஞ்சம் லெசாக பொருந்தாமல் இருக்கிறது. ஆனால் அருமையான ரஹ்மான் மாதிரியான பாடல்- குறிப்பாக பாடலில் வரும் புல்லாங்குழல், இரண்டாம் சரணதிற்க்கு முன்பு வரும்BGM அருமையோஅருமை.

கொஞ்சம் michale jackson சாயல் வந்துவிடுவொமோ யென்ற பயத்தில் அரம்பிக்கும் 'ஒரு வெட்கம்' , சமீபத்தில் வந்த வாரணம் ஆயிரம் ரகம்.அருமை , பாடலில் தொடர்ச்சியாக வரும் அந்த bass lines , ரிதம் அருமை . shreya ghoshal பக்கா , அதுவும் சரணம் ஆரம்பத்தில் அவரது குரலும் bass lines உம் சொக்க வைக்கிறது .கண்டிப்பாக இந்த வருடத்தின் சிறந்த பாடல் , கொஞ்சம் சுமாராக படம் பிடித்தாலும்.

தீம் முசிக் மாதிரி ஆரம்பித்து குழந்தைகளின் rock பாடல் மாதிரி இருக்கிறது. சரணத்தில் , கொஞ்சம் என்னுடய விருப்பமான கார்திக்ராஜாவை நினைவுபடுத்திகிறார். பாடல் வரிகளில் , வாண்டுகளின் அட்டாகசம் ததும்பிகிறது.

பென்னி தாயளின் பெயரை பார்த்த உடன் தெரிந்து விட்டது , இது ஒரு இன்னொரு சுப்பிரமணியபுர rock பாடல் மாதிரி தான் இருக்க போகிறதுஎன்று. நன்று. துள்ளலாக இருக்கிறது. ஆனால் அடுத்த படத்தில் உபயகோபடுத்த வேண்டாம்.

ஜேம்ஸ் வசந்தன்- இவர் கற்புறம் இல்லை , சுரியனாக வர வாழ்த்துகள். அதற்க்கு இரண்டம் படி வைத்து விட்டார்.

Saturday, March 07, 2009

TN07 AL 4777 and AAmir

taxi நம்பர் படமும் ஆமீரும் நேற்று பார்த்தேன் . இரண்டு படமும் பார்த்தேன் . இரண்டுமே , ஒரு நாளில் நடக்கும் கதையை இரண்டு மணி நேரத்தில் சுருக்கி கூறப்பட்டுள்ளது . இறுதியில் , நமது ரசிகர்கள் மனம் நோகாதவாறு , ஆமீரில் கொஞ்சம் சோகம் கலந்திருந்தாலும் , முடிவில் பாஸிடிவாக முடித்திருக்கிறார்கள்.

ஆமீரில் , வெளி நாட்டிலிருந்து வீடு திரும்பும் ஒரு முஸ்லீம் டாக்டர் , ஒரு தீவிரவாதியின் செல்ஃபோனில் சிக்கி , விக்கி , தவித்து முடிவில் , தனது பெயருக்கேற்ப்ப ( ஆமீர் ஏன்றால் தலைவனென்று பொருள்) ஒரு காரியத்தை செய்கிறார். ஆமீர் , புத்துணர்ச்சி பெற்ற இந்தி சினிமாவின் ஒரு அடையாளம். பாடல்கள் இல்லை , காதல் இல்லை , ஸ்டார் இல்லை , அதிகமாய் சிருக்கும் வில்லனில்லை. இருந்தும் இரண்டு மணி நேரம் , அடுத்து என்ன நடக்க இருக்க போகின்ற ஆவலை நம்மிடம் தூண்டுகின்றது .

ஆனால் taxi நம்பர் படத்தை அப்படி சொல்ல முடியவில்லை . விறுவிறுப்பான கதை தான் . தேவையில்லாத இரண்டு பாடல்கள் கூட பரவாயில்லை -ஏதிரும் , புதிருமாக இருக்கும் இரண்டு நபர்களின் குணா தசியங்களை விலக்கும் விதத்தில் ஜோலித்திருக்க்கும் இயக்குனர் , இரண்டாம் பகுதியில் படத்த்குப்பில் விழந்த ஒட்டையை இடுப்போ , மார்போ வைத்து அடைக்க மறந்து விட்டார். டாக்ஸி டிரைவராக , கோபம் கொப்பளிக்கும் மனிதராக , உண்மையை மறைக்கும் கணவனாக , பழி வாங்கும் கதா பாதிரமாக - இப்படி பல குணா தசியங்களை , பட தொகுப்பின் சொதப்பல்களிலும் , கொஞ்சம் நகைச்சுவை கலந்து அருமையாக கொடுத்திருக்கிறார் பசுபதி . இவரின் கிழக்குக்கு மேற்க்காக நம்ம ' அஞ்சாதே' அஜ்மல் , இதில் பணக்காரணாக , தந்தையின் சொத்தை திரும்பி பெற வாதாடும் மகனாக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். முன்னவரின் டாக்சியில் இயவர் ஏர போக , அது எப்படி இருவரின் வாழ்க்கையை பாதிக்கிறதென்பது தான் கதை.

ஆமீருக்கும் , taxi நம்பர் படத்திற்க்கும் உள்ள இன்னொரு ஒற்றுமை , jazz இசையை மையமாக வைத்து அமைந்துள்ள பின்னனி இசை . ஆமீரில் , இது கொஞ்சம் தூக்கம். ஹாலிவுடில் , இந்த மாதிரி படத்திற்க்கு jazz இசையை தான் பயன் படுத்துவர்.இங்கேயும் கச்சிதமாக பொருந்தியிருக்கிரது. கூறிப்ப்பாக , முதல் பதினைது நிமிடங்களில் theme செட் பண்ணும் இந்த பினனி தூள்.ஆமீரில் பாடல்கல் பின்னனியாக , படத்துடன் கலந்து வருகிறது . தீவிரவாதி அவரை ஒவ்வொரு இடமாக அலைய விட்டு, அப்படி அலயும் போது , கதாநாயகனின் முஸ்லீம் இன உனர்ச்சியை உஸ்ப்பேத்தி விடும் காட்சிகள் , ஒரு நல்ல சைக்கிளாகிகல் யுக்க்தி.அதே சமயம் , ஆமீரை பார்த்து , ஐஸ் குச்சியை நக்கிய படி , அந்த விபச்சாரி , தான் ஆங்கில காம யுக்திகளிலும் அனுபவமிக்கவளென்று சொல்லுவது மும்பை இயக்குனருக்கான லொள்ளு.


80ஸில் , பணக்கார பெண்ணும் , எழை ஆணும் படத்தின் பாதி வரை சண்டை போட்டு விட்டு , அப்புறம் ஜப்பானில் போயி டுயட் பாடுவர்கள். டாக்ஸியில் கிட்ட தட்ட அப்படி தான் . ஆனால் ஹீரோயின் கிடையாது . அதற்க்கு பதிலாக அஜ்மல் - ஏதிர்பாராத விதமாக பசுபதி வண்டியில் ஏறி விட்டு , அதில் தன் பாங்க் லாக்கரில் கீயை விட்டு விட , அந்த டாக்ஸி விபத்தில் மட்ட அதிலிருந்து எலி-புனை கதை ஆரம்பிக்கிறது.ஆமீரில் , எலி த்னது வீட்டிற்க்கு போகும்ம இல்லயா என்பதௌ தான் மைய்யம் . இந்த ஒரு வித்தியாசித்திலாலே , ஆமீருடன் நமக்கு கொஞ்சம் பினைப்பு அதிகமாக இருக்கிறது.டாக்ஸியில் , விறுவிறுப்பிற்க்கு தீனி கம்மி . இன்னும் கொஞ்சம் தீனி போட்டு , கதா பாத்திரங்களுடன் பினைப்பு ஏற்படுகிற மாதிரி பண்ணியிருந்தால் , டாக்ஸி நன்றாக் இருந்திருக்கும் , சிம்ரன் , பசுபதியின் நடிப்பை போல .

Saturday, February 28, 2009

அரசியல் தமாஷ் - 2



தன்னுடய மைத்துனனிற்க்காக லஞ்ச ஒழிப்பு அதிகாரியை மிரட்டியதால் அமைச்சர் பூங்கோதை தனது பதவியை இழந்தார், எட்டு மாதத்திற்க்கு முன்பு . அவர் லஞ்ச ஒழிப்பு அதிகாரியிடம் பேசியவை வெளியாகி பெரும் சர்ச்சை ஆகி ,முதல்வர் அப்படி ஒரு நடவடிக்கை எடுத்தார் . பாராடதக்கது , இரண்டு நாள் முன்பு வரை.

நேற்று நமது கவர்னர் அதே பூங்கோதைக்கு தகவல் தொழில்நுட்பம் அமைச்சரவையை தாரை வார்திருக்கிறார். அந்த விழாவில் கலைஞரின் இரண்டாவது குடும்பம்த்தினர் அனைவரும் கலந்து ஆசிர்வத்திதுள்ளனர். ஒய்வு பெற்று , பேர பிள்ளைகளுடன் கொஞ்சி கொண்டிருந்த ஷண்முகம் தலைமையில் நியாயமான ஒரு விசாரணை கமிஷன் வைத்து பூங்கோதை குற்றமற்றவரென்று சான்றிதள் தந்துள்ளார் . அப்படியானல் , அந்த தொலைபேசியில் இடம் பெற்ற அந்த பெண்மணி , அந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரி யார் ? சும்மா விளையாட்டென்றால் , அப்படி விளையாடியனவர்க்ள் யார் ?

***

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் தொகுதி உடன் பாட்டை பற்றி பேச குலாம் நபி ஆசாத் சென்னை வந்துள்ளார். அலுவலக பணி இடர் பட்டாலும் , குலாம் நபியின் சிறுபான்மை மனம் நோவக்கூடாதென்பதில் கலைஞர் கவனமாக இருப்பார். தொகுதி உடன்பாட்டில் ராமதாஸும் பங்கேற்ப்பாறா? இல்லை கடைசி நிமிடம் வரை மதில் மேல் பூனையாக இருந்து யார் ஜெய்க்க போகும் கட்சி யாரென்பதை கண்டுபிடித்து அந்த கூட்டணியில் சேர்வாரா? இருக்கவே இருகு நம்ம இலங்கை பிரச்சனை .. என்ன முடிவெடுத்தாலும் அதை காரணம் காட்டி விடலாம்.

****
தினகரனில் எல்லா கட்சிகள் பற்றி பாகுபாடில்லாமல் செய்தி பிரசுரிக்கின்ரனர். இதை பற்றி பெருமைப்பட ஒன்றும் இல்லை . கலைஞரும் மாறன் சகோதரர்களும் இடையில் கொஞ்சம் ஃபெவிகால் போட்டபட்டுள்ளது. இருந்தாலும் அழகிரியின் கை ஓங்கி இருக்கும் வரையில் கொஞ்சம் கவனமாக தான் இருப்பார்கள் மாறன் brothers

***
தலைமை தேர்தல் அதிகாரி கோபால்சாமி, தனது சகா நவீன் சாவ்லா காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்படுகிறாரென்று அவரை பணி நீக்கம் செய்ய்ய வேண்டுமென்று அவரின் பரிந்துரை , எதிர்பார்த்தபடி நடுவண் அரசால் நிராகரிக்க பட்டது . ரு வேளை கோபால்சாமி கொஞ்சம் அதிக பிரசங்கி தனமாக இருந்திருக்கலாம். நமது சேஷன் மாதிரி மன நிலை உடயவராக இருக்கலாம். இது வரைக்கும் சரி - ஆனால் அவர் அனுப்பிய ஆதாரங்கள் உண்மையா? அப்படி பொயென்றால் , ஏன் பொய்? உண்மையென்றால் , அதற்கு நடுவண் அரசு எனன் நட வடிக்கை எடுக்க போகிறது ?

நாமம் போட்ட ஒரு காரணத்தினால் , கோபால்சாமியை பி.ஜே.பீ யின் ஆதர்வாளரென்று கூற்வது சுத்த மடத்தனம் . அவரது அறிக்கையில் ஆதாரஙளை தெள்ள தெளிவாக கூறியிருப்பதாக www.rediff.com சொல்லுகிறது. அது செரி , எமர்ஜேன்ஸி போது காங்கிரஸ் ஆட்சிக்கு ஜால்ரா அடித்தவர் தான் இந்த நமது நவீன் சாவ்லா?

Wednesday, February 25, 2009

கலைமாமாணி நயந்தாரா !!!!!!!!

சுமார் எழுபது கலைஞர்களுக்கு ( நம்ம cm a சொல்லல) இந்த வருடம் கலைமாமணி விருதுகளை விநியோகம் பண்ணியிருக்கிறார்கள்.அதில் ஆண்களுக்கு செலவு வைத்த அஸின்னும் , நயந்தாராவும் அடக்கம். கலைமாமணி விருது எப்படி வந்தது , அதை பெரியார் எப்படி எதிர்த்தார் , அதை யாருக்கெல்லாம் கொடுத்திருக்கிறார்கள், என் இந்த இரண்டு ஹீரொயிங்களுக்கு கொடுக்க கூடாது போன்ற உபயகோமற்ற செய்திகளையும் , கருத்து நுரைகளையும் நீங்கள் ஞானியிடம் எதிர்பாருங்கள்.

நான் அப்படியே உல்டா ...என்ன தவறு . பெண்களாய் பிறந்து , அழகான அம்சங்களை வளர்த்து பேணி காபற்றியது குற்றமா? நயந்தாரா நமக்கு என்ன்வெல்லாம் செய்திருக்கிறார்!!

ஒரு மிலிட்டரி மாமாவிற்க்கு மகளாக பிறந்து , இந்தியா முழுவதும் சுற்றி திறிந்து , தமிழுக்கு சந்திரமுகி மூலம் அறிமுகமாகி , இன்று வில்லுவில் விஜயின் ஆட்டத்தை விட அவர் ஒரு பத்து அடி தூரம் ஓடி வந்தால் விஸில் தூள் பளக்கிறது!எத்தன அஜித்ரசிகர்கள் பில்லாவில் அவரின் சண்டை காட்ச்சிகள் போது உறங்கி விட்டு , கிளோ-ஸப் காட்ச்சிகளில் வீரென்று துள்ளி எழுந்தனர் ! பில்லாவில் கூட அவர் திறமை தெரியவில்லையா ? வில்லுவில் எத்தனை காட்சிகளில் குனிந்து நிமிர்ந்து , ' தலை நிமிர்ந்து நில்லடா' யென்னும் பாரதியின் கற் சொற்க்களை பிரகடன படுத்தியிருப்பார்!!

இன்னும் கொஞ்சம் பின்னோக்கி போவோம் . நயந்தாரவை..மன்னிக்கவும் ..வல்லவனை எடுத்து கொள்ளுங்கள் . சிம்புவின் மீது பல பொறாமை தொயிந்த அனல் முச்சினை அவர் முளைக்க்குள் புக செய்து அவர் நயந்தாராவுடன் கச முசா பண்ணிய திரை காவியங்களை வெளியட செய்து விட்டனரே, நமது ரசிகர்கள் ! அதை பார்த்து எத்தனை நாள் எனது நண்பன் ( ஆஸ் க்கு... எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு ஸார்) தலைகாணியை கடித்திறுப்பார்? அவருக்கும் என்ன பல உருப்புகள் உருப்படியாக இல்லயா ?

குசேலனில் ரீ-ரெகார்டிங்கில் அவரை பார்த்த போழுது , உணர்ச்சி போங்கி கீ போர்டை அமுக்கி, அதுவே அருமையான பின்னனி இசையாக நமது தம்பி ஜீ.வீ.பிராகஷ் கொடுக்க வில்லையா? வல்லவனில் சிம்பு அடித்த கிஸ்ஸை பார்த்து ,' சினிமாவிலே இப்படி பண்ண்ரானே , நிஜமா என்ன பண்ணியிருப்பானென்று ஒரு கள்ளி காட்டு இதிகாஸத்தை நமது நண்பர்கள் படைக்க வில்லையா?' . இது கூட பரவாயில்லை ..வடிவேல் , குசேலனில் அந்த கிலோ-ஸப்பில் நயனதாராவின் ..ச் ச் .. முடிய வில்லை .

கலைக்கு இப்படி செவையும் உப்புமாவும் செய்த நமது நயந்தாரவிற்க்கு என்ன கொடுத்தாலும் தகும் !! இப்பொழுது இந்த இரண்டு காவியங்களை பார்த்து மகிழுங்கள்.







Sunday, February 22, 2009

தமிழ அரசியல் - தமாஷ் -1



காங்கிரஸுடன் கூட்டணிக்கு தயாரென்று நமது தாயார் கூறியுள்ளார். படிக்காதவனில் உள்ள மசாலாவை விட இந்த அறிவிப்பில் அதிகம்.ஏன் ?

1) ஒரு வேளை கூட்டணிக்கு காங்கிரஸ் தயாரென்றால் , தி.மு.காவின் கதி என்ன ? பாட்டாளி மக்கள் கட்சியின் மீது குதிரை சவாரி செய்ய்ய வேண்டிய தான் . மாநில ஆட்சியும் காங்கிரஸை நம்பி இருப்பதால் , கலைஞர் தனது திரை கதை எழுதும் திறமையை கொஞ்சம் கூர் படுத்தி கொள்ள வேண்டும் . ஒன்றும் இல்லையென்றால் , அதை வைத்து கொண்டு ஒட்டலாம்.

2) கனிமொழி என்ன பண்ணுவார்? சென்னை சங்கமம் என்ன ஆகும் ? ஜெகத் காஸ்பெரின் LTTE உதவிக்கு யார் உதவி செய்வார்? கனிமொழி பேசாமல் பெண் விடுதலை பற்றி பத்து புத்தகங்கள் எழுதி , அதை வீரமனி வைத்து வெளியிட்டு, அந்த வெளியிட்டு விழாவில் 'தமிழ் பெண்கள் மட்டும் கற்ப்புகரிசிகள், ரீக் வேதத்தில் மற்ற பெண்களை தொட்டு விட்டு தான் ஒரு இந்து சாப்பிட வேண்டுமென்று சொல்ல்யிருக்கிறது ' போன்ற கருத்துக்களை கூறி மீடியாவில் ஒரு வாரம் ஒட்டலாம்.

3) ஸ்டாலின் ? ஒரு வேளை பாரளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்- ஆ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்று , தி.மு.கா மாநிலத்தில் ஆட்சி இழக்க ஏற்பட்டால் - தனது தொகுதியை மட்டும் நென்றாக கவனித்து கொள்ளலாம்.டி.ஆர்.பாலு , ஆற்காட்டார் போன்றோரை ஒதுக்கி வைக்க முயற்ச்சி எடுக்க வேண்டும். எப்படியும் ஜெயலலிதா எதாவது ஊழலோ , கடுமையான நடவடிக்கை எடுத்தோ மக்கள் செல்வாக்கை இழந்து விடுவார்- அப்பொழுது மீண்டும் தி.மு.கா காட்சிக்கு வரும் - ஸ்டாலின் Cm ஆகலாம்.

4) நமது சிகப்பு சகோதரர்களை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது. காங்கிரஸ் பழம் புளிக்குமென்று ஆ.தி.மு.க பக்கம் சாய்ந்தால், ஆ.தி.மு.கா அந்த பழைய புளித்த பழத்தையே நக்கி இருக்கிறது. இதுவும் தேவை , இன்னுமும் தேவை !

5) சேது சமுத்திரம் , ஸ்பெக்ற்றம், தன் மகனின் கம்பேனிக்கு சலுகை கட்டிய ஊழல்- இப்படி பல செய்த நமது எச்சிலுகுரிய அமைச்சர்கள் , முடிந்த வரையில் சுருட்டி கொள்ள வேண்டும். ஜெய லலிதா வந்தால் , ஜெட்டி முதற்கொண்டு உருவி விடுவார்.

6) இதில் பெரிசாக பயன் பேறுபவர் நமது மாறன் சகோதரர்கள் தான் . காலாநதி மாறனை வைத்து தினகரனில் எல்லா கட்சிகள் பற்றி பார பட்சம் இல்லாமல் செய்திகள் வெளியிட வேண்டியது. காலநதி மாறனை வைத்து தாத்தா, ஸ்டாலினுடன் கொஞ்சம் ஃபெய்விகால் ஒட்டு ஒட்ட வேண்டியது. ஜெய்ச்சால் , காலநதி மாறன் , தோற்றார் தயானதி மாறனின் காப்பாற்றுவார்.

Friday, February 20, 2009

நான் கடவுள்




இந்த ப்டத்தை எப்படி விமர்சனம் செய்வதென்று தெரியவில்லை. நான் என்ன எதிர் பார்த்தேன் என்று தெரியவில்லை . சில துளிகள் மட்டும் இங்கே!

1) இரண்டு முன்று நிகழ்வுகளை வைத்து கொண்டு மீதி பதினைந்து காட்சிகளில் சிலரின் வாழ்கையை - அல்லது வாழ்க்கை இல்லாததை மட்டுமே வைத்து ஒரு இரண்டு மணி நேர படத்தை கொடுக்க முடியுமா?

2) எல்லாரும் இளையராஜாவின் இசையை நமிதா உயரத்திற்க்கு புகழ்கின்றனர். எனக்கு பாடல்களை தவிர பின்னனி நிறய காட்சிகளில் ஒரு இடராக உணர்ந்தேன். குறிப்பாக முன் பாதியில் சில காட்சிகளில் , அந்த உணர்விற்க்கு மாறாக இருப்பதாக பட்டது . ஆனால் அதே சமயம் அகோரியின் மனது ஒரு புரியாத புதிர் யென்பதை விளக்குவதற்க்காக இப்படி செய்ய்ய பட்டதாயென்று தெரியவில்லை .

3) பூஜா நன்றாக நடித்திருகின்றார், அவரின் அந்த வெள்ளை லென்ஸ் அப்பட்டமாக தெரிந்தாலும் ! கிளைமாக்ஸில் அவரின் உருக்கம் , படதொகுப்பாளரின் கை வண்ணத்தால் பட சுறுளில் கரைந்து போயிருக்கிறது.

4) கிளைமாக்ஸ் பலர் பல பல்லுடன் பல கருத்துகளை வீசி இருக்கின்றனர். அகோரி வாழ்வு இப்படி தான் இருக்குமோ ? சினிமாவில் ஹீரோ யார் என்பதை கொஞ்ச நேரம் சிந்திக்க செய்கின்றார் பாலா !

5) இந்த மொட்டை வில்லன் பக்கா - அதிலும் அந்த ஊமையை பிச்சை வைக்க அவர் செய்யும் ... பாலா - fantastic !!!

6) வடிவேல் கூடவே பல படத்தில் காமேடிக்கு ஒத்து ஊதி வந்தவர் இந்த படத்தில் பிண்ணி யெடுத்திருகின்றார்.

7) படத்தின் மைய்ய நாடி- நாங்கள் பிச்சை காரர்கள் , சமுதாயம் நக்கி துப்பிய கசடுகள் - இந்த குப்பையில் சந்தோஷங்கள் , அன்பு , பினைப்பு இருக்கும் - ஆனால் இப்படி கூட வாழ் விட மாட்டார்கள் போல இருக்கிறதே.இப்படி உள்ள ஒரு சுழ் நிலையில் சமுதாயத்தை எச்சிலாக மதிக்கும் ஒரு அகோரி வந்தால் !

8) இந்த படம் பிடித்திருகிறதா ? - ஒரு வாரம் முன்பு இல்லை , இப்பொழுது யொசிக்க நன்றாக இருக்கிறது !!!

Saturday, February 07, 2009

எங்களுக்கும் ஒரு இடம் !


நேற்று , பிராமணர் சங்கத்தில், பிராமண்ர்களுக்கு எழு சதவிதம் இடம் கிடைக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருகின்றனர். இதில் எஸ். வீ. சேகர் போன்றோர் கலந்து கொண்டிருகின்றனர். இதை reverse discrimintaionல் பார்க்க வேண்டும்.உண்மையில் ,பிராமண்ர்களுக்கு என்ன மாதிரி தொல்லைகள் இருகின்றன யென்பதை பார்ப்போம்.

1) எல்லா படங்களிலும் குறைந்தது பிராமணர்கள் பழமைவாதிகள்,ஜாதி வெறியர்கள்-விவேக் உட்பட பல நபர்கள் சித்தரித்து உள்ளனர். இதில் ஒரளவு உண்மை இருந்தாலும் , தலித்தின் வாயில் மலத்தை அடைக்கும் அளவுக்கு ஜாதி வெறி இல்லை. கமலஹாஸன் தேவர் மகனெறு ஒரு படத்தில் தேவர்களை போற்றி ஒரு பாடல் வைத்ததால் , தலித் அன்பர்களை அந்த பாடல் பாடி அடக்கியாண்டர்களென்று ஒரு அரஸ்யில்வாதி கூறினார்( எவ்வள்வு உண்மைஎன்று தெரியவில்லை ) .

2) எல்லோரும் விவாதித்து நைந்து போன இட ஒதிக்கிடு . இதை பற்றி விரிவாக கூற தேவயில்லை.

3)சில அரசியில்வாதிகள், குறிப்பாக, நமது கலைஞர் அவர்கள் , தான் பிராமணர் இல்லாத காரணத்தில் தான் முன்னேற முடியவில்லையென்று ஆயிரம் கோடி சொத்து செர்ந்த்து பின்னரும் கூரி கொண்டிருகின்ரணர்.

4) ஜாதி பெயர் ஒரு prefixஆக கெட்ட வாத்தைகளுக்கு முன்பாக உபயகோபடுத்தபடுவது அநேகமாக 'ஐயர்' ஜாதிக்கு தான்.உதாரணமாக 'ஐய புண்**'.

5) எந்த விவாதமெத்தாலும் , அதில் ஒரு பிராமணர் பங்கேற்றால், அவருடய வாதத்திற்க்கு சரியான காரணங்களின் கோர்வையாக எதிர் வாதம் கிடைக்காவிட்டால், உடனடியாக மனு சாஸ்திரத்தை எடுத்து விடுவார்கள். மனு சாஸ்திரத்தை பூரணமாக படிக்காமல். மனௌ சாஸ்திரத்தின் படி பிராமணன், பிழைப்பதற்க்கு வேதங்களைஒதி தான் பிழைக்க வேண்டும். பணம் சேர்த்து வைக்க கூடாது. இந்த மாதிரி விடஷயங்களை அவர்கள் சுட்டி காட்ட மாட்ட்டர்கள்.

இப்படி பல ..ஆனால் , இந்த காரணங்களுக்காக இட ஒதிக்கிடு கேட்பதா ? எஸ்.வீ. சேகர் நன்றாக காமமேடி பண்ணுகிறார், உண்மையிலே! மேல சொன்ன ஐந்து விஷயங்களால் , பிராமணர்களை யாரும் ஒதுக்க வில்லை . ஆனால் கொஞ்சம் கொஞ்சம் மரியாதை குறைவாக நடத்துகின்ரனர். அவ்வள்வு தான் . அதிலும் பெரிய காமேடி , பிராமணர்கள் சிறு பான்மையோரென்று காரணம் காடி இட ஒதிக்கிடு வேண்டுமாம். இப்படியே போனால் , எதோ ஒரு groupism விதிகளில் , ஒரு குழு சிறுபான்மை குழுக்களில் சேர்ந்து விடும்.

போங்கடா போங்க

இலங்கை தமிழர்களை கொடுமை படுத்தும் சிங்கள அரசின் நடவடிக்கைகளை கண்டித்து இன்று மற்றொரு இந்திய தமிழர் இன்று தீ குளித்துள்ளார். இதை பலர் பல விதமாக பார்க்கின்றனர். எனக்கு அவருடய குடும்பத்தை நினைத்தால் தான் கொஞ்சம் கவலையாக இருக்கிறது. அவர்து தாய் , தந்தை , தம்பி , மனைவி , குழந்தைக்களுக்கு அவரின் கடமை என்ன ஆயிற்று ?ஒரு அரசியில் தலைவர் தீ குளிப்பது இல்லையே !

உயிரை என் எப்படி துச்சமாக மதிக்கின்றனர்? இல்லை தீ குளித்தால் தான் ஏதாவது ஆக போகிறதா ? அதற்க்கு பதிலாக , கள்ள தோணி பிடித்து இலங்கைக்கு போய் ஏதாவது செய்யலாமே! இல்லை ஒரு ஆயிரம் பேரை சேர்த்து ஒரு பெரிய போரடத்தை நடந்த்த்லாமே-அப்பொழுது ஒன்றும் பெரிதாக நடந்து விடாது , ஆனால் உங்கள் உயிர் இப்படி போகாது . எல்லாற்றுக்கும் மேலாக தமிழை உயிர் போல மதித்து , இந்திய தமிழர்களை சர்க்கஸ் கோமாளிகளை போன்று நடத்தும் நமது அரசியில் வாதிகள் இதை பற்றி ஒரு வரி கூட துப்ப மாட்டார்கள்.வோட்டு கேட்ட்கும் போழுது மட்டும் ஒட்டுவார்கள்.

இது இப்படி யென்றால் , சிங்கங்கள், புலிகள் , சிறுத்தைகளென்று கட்சிகள் நடத்தி வரும் 'உலக' தமிழர்கள் , நமது நாட்டின் சொத்துகளை அழித்தால் , இலங்கை தமிழர்களை வாழ வைக்குமென்று நம்புகின்றனர். இதற்கு பதிலாக அவர்கள் வீட்டு பொருட்களை தெருவில் போடு உடைக்கலாம். முடிந்தால் இந்த போராட்டத்தில் நாங்களும் உற்சாகமாக கலந்து கொள்வோம்.முதலில் அந்த கட்சியின் தலைவரின் வீட்டு பொருட்களிலிருந்து ஆரம்பிக்கலாம்.முதலில் சாகும் வரை அவரின் நான்கு நாள் போராட்டம் முடியட்டும்.

அப்புறம் நமது சி.எம் அடித்த பல்டி பற்றி பல அன்பர்கள் தங்கள் இணைய தளத்தில் கல்வெட்டு எழுதி வைப்பது போல எழுதி உள்ளனர். குறிப்பாக அவர் பிராபகரனை ஒரு சர்வாதிகாரி யென்றும் , சகோதர யுத்ததின் ஆரம்ப வேராக இருக்கிறாரென்று அவர் சொல்லியிருப்பது இது தான் முதல் தடவையென்று நினைக்கிறேன் . இது அவர் பார்த்த உண்மையா , இல்லை மத்தியில் மந்திரிகளை நிலைக்க வைக்கும் உத்தியா, பல்டியா, வயதானவர்களின் குழப்ப பேச்சா, தெளிவா , தனது ஆட்சி காங்கிரஸின் கையிலும் இருக்கின்ற உண்மையா-தெரியவில்லை. ஆனால் சில பல வருஷமாக கடிதம், எதுகை-மோனை,முரசொலி,தங்களின் குடும்ப சானல்கள், இப்படி பல வற்றின் மூலம் LTTE க்கு ஆதரவு தெரிவித்தவர் , இப்படி சொல்லியிருப்பது , well its surprising !

எல்லாவற்றிக்கும் மேலாக,சோ, ஜெயலலிதா, கலைஞர், சிறுத்தைகள்,தமிழ், இதயம் இனித்தது-> இதையெல்லாம் விட்டு விடுங்கள்.அப்பாவி மக்கள் நமக்கு அண்டை நாட்டில் , வருட கணக்கில் யாரோ பண்ணிய தப்புகளின் குவியல்களின் காரணமாக இன்று கொடுமைகளை அனுபவிக்கின்ர். நாம் வாழும் வெறுமை மனதில் கொஞ்சம் ஈரமும் பிறக்கட்டும். அதற்க்கு பிறகு உங்கள் வாழ்கயை பார்த்து கொள்ளுங்கள்.

Wednesday, January 14, 2009

அபியும் நானும் - வா வா என் தேவதையே!!




'அபியும் நானும்' பாடல்களை முதல் முறை கேட்ட பொழுது எனக்கு அப்படி ஒன்றும் பெரிதாக சொல்லி கொள்ள ஒன்றும் இல்லையென்று தான் தோன்றியது. அதிலும் அந்த கைலாஷ் கெரின் உச்சரிப்பு - பாவர்க்காய் சாரை போல கசந்தது. சாதனா சர்கம் பாடல் மட்டும் பாஸ் மார்க் வாங்கி தலையை தூக்கியது. வித்யாசாகரை இளையராஜாவின் வாரிசு என்றேழுதிய கையை ஒரு முறை கடிக்கலாம் போன்று இருந்த்து - இந்த பாடலை கேட்கும் வரை .

அப்பா - மகள் உறவு பற்றி அதிகமாக யாரும் திரையில் சொல்லியது இல்லை . அப்படியே சொன்னாலும் , ஒடி போன மகளை நினைத்து உருகி , மருகி அழும் அப்பாவை தான் காண்ப்பிபார்கள். இந்தியில் இதை விட மோசம். அந்த உறவை இசையை விட இசையில் மிதக்கும் அருமையான வரிகளில் இன்னும் அழுத்தமாக சொல்ல முடியும்.வைரமுத்துவும் வித்யசாகரும் அதை தான் செய்திருக்கிறாற்கள். ஆண் என்ன தான் தான் தன் மனைவியை கட்டி போட்டாலும் தன் மகளென்று வரும் போது பாசம் அவனை கட்டி போட்டு விடும் , சுதந்திரமும் துளிரும் - அவள் மீது அக்கறை மட்டும் அந்த சுந்ததிரத்தை சுருக்கும்.

cut the crap !- இந்த பாடலில் நான் ரசித்த சில வரிகள்!

செலவ மகள் அழுகை போல் ஒரு சில்லென்று சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகை போல் யுக பூகளுக்கு புன்னகைக்க தெரிய வில்லை


என் பிள்ளை எட்டு வைத்த நடையை போல எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முதுக்கள் தெரிக்கின்ற மழலை போல முன்னூறு மொழிகளில் வார்தைகள் இல்லை.

தந்தைக்கும் தாயமுதம் சுரந்தம்மா..என் தங்கத்தை மார்போடு அனைக்கையலே !

normally , நான் இசையை மட்டும் தான் கவனிப்பேன். அதன் ஒவ்வரூ ஸ்வரத்தையும் ரசிப்பேன். இப்பொழுது வார்த்தையும் ரசிக்க காரணம்- வித்யசாகரா? வைரமுத்துவா ? பிராகஷ் ராஜ .....யாரும் இல்லை - என் பெண் குழந்தை தான் !

Friday, January 02, 2009

நான் கடவுள் - by Illayraaja

நான் கடவுள் பாடல்களுக்கு என்ன மாத்திரி விமர்சனத்தை எழுதுவதென்று தெரிய வில்லை - சிவோஹம் பாடலை கேட்டால் நம்மை AC ரூமிலிருந்து , இமய மலைக்கு கொண்டு செல்கிறது. சிரேயாவின் 'கண்ணில் பார்வை' பாடலும் சரி , வரிகளும் சரி - ஒரு பிச்சைகாரிக்கு எழுதினாலும் செல்வ செழிப்புடன் இருக்கிறது. மாதாவின் உன் கோவிலில் பாடலும் , அம்மா உன் பிள்ளை பாடலும் பழைய வீட்டிற்க்கு புதிய , அதே சமயம் பாரம்பரியத்தை கெடுக்காத வண்ணம்.

பிச்சை பாத்திரம் பாடல் - ஒரு பக்தி பாடலை சினிமாவிற்க்கு உபயோகித்தன் மூலம் , பாடலின் பின்னனி இசையும் , அந்த பாவமும் தான் பாடலின் உணர்வை பிரதிபலிகிறது , ராகம் மட்டுமில்லை யென்பதை நிருபிகிறது. ஒரே கடுப்பு - ஒரு பத்து இல்லை பதினைந்து நிமிடதிற்க்கு பின்னனி இசையிலிருந்து CD yil போட்டு இருக்கலாம்- வாங்குபவர்களுக்கு அது value addஆக இருந்து இருக்கும்.

போதுமடா சாமி !!!!

1) ஒரு சப்பை கதையை எடுத்து கொண்டு அதை non-linear ஆக பிரித்து , ஏதோ Roshmon படம் எடுத்த மாதிரி நமது இயக்குனர்கள் ஒரு square frame கண்ணாடி போட்டு கொண்டு பிற்றி கொள்வது !

2) அழுத்தாமாக இருக்க வரவேண்டிய காட்சிகளில் கூட ஏதோ மணிரத்னத்தின் வாரிசாக தன்னை நினைத்து கொண்டு , 'ஏன்' ' அப்பா', ' பிணம்' போன்ற வசனகளை மட்டும் வைத்து , ஏதாவது கேட்டால் cinema is a visual medium யென்று நமக்கே pump அடிக்க வேண்டியது !

3) கதாநாயகி அறிமுக காட்சியில் அவரை நாயுடு ஹாலுக்கு இலவசமாக விளம்பரபடுத்துகின்ற மாதிரி ஒடுவது !

4) 'ஏலே, வாலே போன்ற வார்த்தைகளை மட்டும் உபயோகித்து திருநெல்வேலி nativityயை காட்டியவாறு பிற்றி கொள்வது !

5) ஊரில் பல மின்சார வயர்கள் அறுந்து கிடக்க இவர்கள் ஏதோ ஜாக்கி ஜான் தம்பி மாதிரி அந்த வயர்களை வைத்து சண்டை காட்சிகள் போட்டு விட்டு , matrix பாணியில் சண்டை காட்ச்சிகள் இருப்பகதாக பொங்கல் தினத்தன்று பேட்டி காணும் ஒரு ஜல்சா figure யிடம் பீலா உடுவது !

6) ஒரே ஒரு படதிற்க்கு பாடி விட்டி airtel super singer நிகழ்ச்சிக்கு நடுவராக போவது !

7) தயாரிப்பாளரின் மகன் என்ற ஒரு தகுதியை வைத்து, பைனாசியர் மகன் என்ற ஒரு தகுதி மட்டும் இருக்கும் ஒரு மாமாவை ஹீரோவாக போட்டு அதற்க்கு ArRehman அல்லது யுவன் இசையை போட்டு படம் இயக்குவது !

8) என்னுடய கதையை யாரும் படமாக்க விரும்ப வில்லை , யாரும் நடிக்க மறுக்கின்றனரென்று உட்டான்ஸ் விட்டு , ஒரு gulfi figure ai கதாநாயகியாக போட்டு , தொட்டு கொள்வதர்க்கு வடிவேலையோ விவேக்கையோ போட்டு சொந்த படம் எடுப்பது .

9) ஒரு படத்தை தமிழில் எடுத்து , அதை தெலுங்கில் ரீமேக் செய்து , அதை பாத்து கன்னாடவில் ஒருவர் படமெடுத்து , அதை திரும்பி இங்கே நம்ம இளைய நாயர்களை வைத்து பட்மெடுத்து நமக்கு ஆப்பு வைப்பது !

10) கிராமங்கள் புதன் கிரஹத்தில் இருப்பது போல படமெடுக்கும் இந்தி பட உலகில் , இரண்டு படங்கள் வேலை செய்து , இந்தி படங்கள் தான் நன்றாக இருக்கின்றன யென்று பேட்டி கொடுக்கும் ஒளிபதிவாளர்கள்!