Monday, December 22, 2008

பொம்மலாட்டம் - பார் அது ராஜா !

பொம்மலாட்டம் - பார் அது ராஜா !

ஒரு சினிமா படத்தின் விமர்சனத்தை எதிலிருந்து ஆரம்பிப்தென்று தெரிய வில்லை. நான் பின்னணி இசையிலிருந்து ஆரம்பிக்கிறேன் . பின்னி இசை ஒரு படத்தை முன்னணியில் வைக்க வேண்டும். நெருப்பின் அருகே குளிர் காயும் வெப்பத்தை , இரவின் கறுப்பை , திசை தெரியாதை பயத்தை , வார்த்தைகள் இல்லாமல் இசையால் பார்ப்பவரின் மனதில் அந்த தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் - பின்னணி இசை சேர்த்து நம்மை படத்தின் கருவிலிருந்து பிரித்து விட்டார் மாண்டி ( தேவதாஸ், sawariyaa படத்திற்கு பின்னணி சேர்த்தவர்) . மிகவும் நுட்பமாக சொல்ல பட்ட காட்சிகளை தலையில் சுத்தியல் போல அடித்து முடிந்த வரை , காட்சியன் தீவிரத்தை காலால் மிதித்து குப்பையில் , அவர் உபயோகித்த keyboard உடன் போட்டு விட்டார்.

அதுவும் பொம்மலாட்டம் மாதிரி கதையமைப்பை கொண்ட படங்களுக்கு - கதையை சுருக்க சொன்னால்- சில கொலைகள் நடந்து , சில கதை மாந்தர்களின் குணாதசியங்களை காட்சிகள் மூலம் விளக்கி சந்தேகங்களை தூவி , ஒரு காட்சி குவியலில் இறுதியில் யார் கொலையாளி என்பதை சொல்லு கிருறார் . யார் கொலைகளை செய்தார் என்பதை கண்டுபிடித்து விடாலாம் - ஆனால் என் கொலை செய்தார் என்பதை கைகளில் பத்து ராசி மோதிரம் போட்டாலும் கண்டு ப்டிகிக்க முடியாது.
நானா படேகரின் பார்வை , அவரின் ஹிந்தி உச்சரிப்பிற்க்கு நிழலகள் ரவி கொடுத்த டப்பிங்கை தாண்டி பிரகாசிக்கிறது.படத்தில் வரும் படத்தில் வரும் கதாநாயகியின் தேர்வு இறுதி காட்சியில் தான் புலபடுகிறது. ஒரு நமிதாவையோ, நயந்தாராவையோ போட்டு இருந்தால் நம்பும் படியாக இருந்திருகாது.ஒரு இயக்குனராக புகழில் குளித்தாலும், கலையை ரசித்தாலும் அதற்க்கான விலையை ரஞ்சிதாவின் கேரக்ட்டரில் தெரிகிறது.பொதுவாக இந்த மாதிரி thriller படங்களில் , கதையின் பிராதான பாத்திரத்தின் வாழ்க்கயில் சில கோனல்கள் இருக்கும் . இந்த படத்திலும், நானா படேக்கரின் பாத்திரத்திலும் அப்படியே!

படத்தில் எல்லா பாத்திரத்தின் மேலும் சந்தேக நிழலலை பிச்சுகிறார்- அர்ஜுன் பாத்திரம் , ஒரு CBI யாக இருந்தாலும் , அவரின் காதல் , அதற்க்கு நானா படேக்கரின் குறிக்கீடு, அதனால் அவர் இதயத்தில் தோன்றும் வன்மம் , எல்லாம் இந்த படதிற்க்கு ஒரு பலம் - காஜல் அகர்வாலின் பாத்திரதிற்க்கு பொருந்தாத உடையும் , வசனமும் மட்டும் தான் த்ருஷ்டி.ஏனோ இந்த படத்தை ஹமிழில் இயக்கி , இளையராஜாவை போட்டு பண்ணி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பதை மட்டும் ஒதுக்க முடிய வில்லை .

மொதத்தில் , நல்ல படம் - பாரதி ராஜவின் பட்டறயிலிருந்து !
சுருக்கமாக - கிருஷ்ணவேனியில் பார்த்தும் இந்த படம் பிடித்து இருந்தது .

Wednesday, December 17, 2008

Kizakku Pathippagam

கிழக்கு பதிப்பகம் ஒரு அருமையான யோசனையொன்றை செய்து இருக்கிறது. குறிப்பிட்ட சிலா புத்தங்களை இலவசமா சிலருக்கு அனுப்பி வைத்து அதை விமர்சனம் செய்ய சொல்லு கின்றனர். தங்களின் விமர்சனத்தை அவர்களின் இணைய தளத்தில் போட வேண்டும் . அவ்வளவு தான் .

நான் "heroes or villains - srilankan circa 2007' என்ற புத்தகத்தை எடுத்து கொண்டைன் . படித்த சில பக்கங்களில் தெரிந்தது - இது ஒரு வருடமாய் தலையங்கங்களின் குவியலனென்று. இதை படிக்க LTTE பற்றி சிறிது தெரிந்து இருக்க வேண்டும். என்னுடைய கிரங்கங்கள் நன்றாக இருந்தன . மருதன் (அருனனா?) LTTE parri எழுதிய புத்தகம் என்னிடம் சொல்லமால் என்னுடைய அலமாரியில் இருந்தது . அதை முதலில் படிக்க வேண்டும் போல !

Thursday, December 04, 2008

Liked Ghajini , didnt SDM !

Somehow ,somehow the oscar nominated Slum Dog..OST didnt find a place in my current play list . i have heard it once in music india online and was unimpressed. It was loud , noisy and never sticked in my memory . It lacked emotion or any background. I understand quite number of people liked it . Let me try couple of times , probably it may change .

On the other hand Ghajini impressed if not in totality , atleast with latoo , Beka , Kaise Mujhe ( esp instrumental) and guzaariSh . It had some emotional tone to it , somehow it reminded me my delhi days and i found some emotional attachment to it .