வலைபூவில் எழுதி இரண்டு மாதம் ஆகி விட்டது. வேலையில் எல்லா பொறுப்பையும் தலை மேல் போட்டு கொண்டால் என்ன ஆகுமென்று நன்றாக தெரிந்து விட்டது.நான் கற்ற சில பாடங்கள்.
1) வேலையில் வெற்றி வர வர வாழ்க்கையில் இது மட்டும் போதுமென்றும் , மற்ற் விஷயங்களை இந்த தற்காலிக வெற்றிகள் பார்த்து கொள்ளுமென்ற ஒரு நினைப்பு வரும்.
2) இரவில் ஒரு மாததிற்க்காக மேலாக இரவு இரண்டு மணி மேலாக வேலை செய்தேன். இரவில் இரண்டு வாகனம் ஒட்டும் போது பாதி தூக்க கலக்கம் தான். ஒரு நாய் இடையில் வந்தால் கூட ஒரு சில விரல்கள் போகும் வரைக்காவது விபத்து ஏற்ப்பட்டிருக்கலாம்.
3)இரவில் வீட்டுசாப்புடு சாப்பிடாமல் , ஹோட்டலில் , அந்த ஹோட்டல் முதலாளி கூட சாப்பிடாத உனவை தான் சாபிட்டேன். முதலில் நெய் ரொஸ்ட் நன்றாக தான் இருந்தது. ஒரு மாதம் கழித்து , வயிரை கிழிக்க ஆரம்பித்து விட்டது.
4) கடினமாக உழைப்பில் கிடைக்கும் தாற்காலிக வெற்றியில் , என் உள்ளே இருக்கும் மற்ற கலை திறமைகள் முச்சு திணர, நுரை தத்த சாகடிக்க பட்டுள்ளது. முன்பு கதை எழுத வேண்டுமென்று தினசரி பேப்பர் படிப்பேன். இப்பொழுது அதற்க்கு கூட பேப்பரை தொடுவதில்லை.
5) முக்கியமாக குடும்பத்தில் உறவுகள் பாதிக்க படும். அழகான ஒரு வயது தேவதைவீட்டிலிருப்பது மறந்து விட்டது. மின்சார கட்டணம் முதல் , என் வண்டியியை துடைக்கும் எனது அறுபது வயது அப்பாவும் , அவரது உழைப்பும் புத்தியில் தங்க வில்லை.
6)இரவு பத்து மணிக்கு வந்து விட்டாலும் , தினமும் இரண்டு மணிக்கு தூங்குனம் பழக்கம் ஏற்பட்டு விட்டதால் , தூங்க முடியவில்லை . உடம்பில் அசதி , கண் உலகை மற்ற முயர்ச்சி செய்கின்றது.
7) இவவளவும் உழைத்த பின்பு நீ உழைப்பது பத்தாதென்று சொலுவர்கள். போதுமடாசாமி !!!