
காதலை மைய்யமாக வைத்து எடுக்க பட்ட படங்களை நான் பொதுவாக பார்ப்பதில்லை. அதில் கதாபாதிரங்கள் கேலி சித்திரமாக இருக்கும். உண்மை இருக்காது. எதார்த்தம் இருக்காது. திரை கதையில் முடிச்சுகள் இருக்க வேண்டுமென்பாதற்க்காக கதாபாதிரத்தின் தன்மை மாறும்.இங்கே பிரச்சனை எதார்த்தம் தான். இப்படியும் நடுக்குமோ யென்று திரை அரங்கில் யோசிக்க வைத்து விட்டால் அந்த படம் பப்படம் தான். அவன் யோசிக்காதவாறு அமேரிக்காவில் ஒரு பாடல், வடிவேலின் ஹாஸ்யம், கயறு போட்டு சண்டை - இப்படி கவனத்தை திருப்பி சரி செய்வார்கள்.
இதில் விதிவிலக்காக சில படங்கள் - உதாரணமாக 'காதல்' திரைப்படம். திராவிட நிறம் உள்ள இருவர் காதலை இந்த 2000ல் சுவையாக சொல்ல முடியுமென்பதை நிருபித்த படம்.எதார்த்தை மீறும் பொழுது சில மேல சொன்ன சில ஒட்டல்கள் தேவை படுகின்றது. இந்த படத்தில் அஞ்சலி ( தமன்னா- 1990ல் ஜோதிகா நடித்திருப்பார்)கதாபத்திரம் நிஜ வாழக்கயில் நாம் பார்க்க முடியுமா ? இதில் பிரச்சனை எதை எதார்த்த்மென்று சொல்கிறோமென்பதை பொறுத்து தான் அமையும். இது என்ன முட்டாள் தனமாக இருக்கிறது ( இதை விட சந்தோஷ் சுபிரமணியம் படத்தில் வரும் ஜேனீலீயாவின் கதாபாதிரம் மிகவும் முட்டாள் தனமாக இருக்கும் ) யென்று யோசிக்கும் முன்பே அதற்க்கு விடை கிடைத்து விட்டது - எனக்கு இரண்டு இருக்கை தள்ளி உட்கார்ந்து இருக்கும் ஒரு அம்மணியிடம் . கிட்டதட்ட அஞ்சலி காதபாதிரத்தின் பிம்பமாக தான் நடந்து கொண்டார். காதாலில் தோல்வியுற்ற ஷக்தியும் ( பரத்,உயரம் கொஞ்சம் கூட இருந்தால் கச்சிதமாக இருக்கும் ) , அந்த அந்த தருணத்தை முழுமையாக , குதுகோலமாக கொண்டாடும் அஞ்சலியும் ஒரு ரயில் பயணத்தில் ( வழக்கம் போல ) எதேச்சையாக சந்திக்கின்றனர்.அதில் இருந்து அவ்ர்களின் வாழ்க்கை மாறி , காதல் புகுந்து என்னா ஆகிரதென்பது தான் கதை.
இந்த மாதிரி கதைகளில் - கதாநாயகன், நாயகி அழகாக தான் இருக்க வேண்டும். அந்த ஜோடி கார், பஸ், பாடல், ரயில் பயணம் - இப்படி பல விஷயங்களில் நடுவே காதல் முளைக்க வேண்டுமென்றால் , அழகாக தான் இருக்க வேண்டும்.அந்த வகயில் கச்சிதமாக பொருந்துகின்ரனர். பரத்தின் மனமாற்றமும்,வெண்பஞ்சு பாடலும் ( வித்யாசாகர் ,) கச்சிதமாக பொருந்துகிரது. ஒரு அழகான, உற்ச்சாகம் சுற்றி வரும் ஒரு பெண்ணுடன் சில நாட்க்கள் கழித்தால் , அவள் மீது , இன்னொருவரை அவள் காதலித்தாலும் , ஒரு ஈர்ப்பு வருமென்பதை ஒளிவு மறைவில்லாமல் சொல்லியுள்ளார். இதை ரோஜாகூட்டம் படத்தில் ஸ்ரீகாந்த் காதபாதிரத்துடன் ஓப்பிட்டு பாருங்கள் , அதில் உள்ள செயர்க்கைதனம் ந்ன்றாக தெரியும்.
ஆனால் , பிரச்சனை இங்கு தான் ஆரம்பிகிறது- எப்படி எடுத்து செல்ல வேண்டுமென்பதில் கொஞ்சம் குழப்பம் உள்ளது போன்று தோன்றுகிறது. இந்த குழப்பம் ' காதல் செய்கிறேன், ஆனால் அவள் இன்னோருவரை காதலிக்கிறார்' - இதை கையாழ்வதில் நமது விக்கிரமனின்வழியை ஏடுக்கிறார்( வேறென்ன , அவள் காதல் ஒன்று செய்வதற்க்கு, இதயத்தை கிழித்து முயற்ச்சி செய்வது). இங்கு தான் எனக்கும் படதிற்க்கும் தூரம் ஆரம்பிக்கிறது.ஒரு படத்திலாவது உணர்ச்சிகளை வெளிபடுத்தும் கதாபாதிரமாக யாராவது வடிவமைக்க மாட்டார்களா? இல்லை , இந்த குழப்பம் தான் யதார்த்தமா ?இந்த இடத்திலிருந்து பாடல் ,mistaken identity, ஜல்லி காரணதிற்காக உண்மை சொல்ல முடியாமல் போவது , பல பல படங்களில் பார்த்து , துவைத்து போன காட்ச்சிகள் தான்.
jabe we met நான் பார்த்ததில்லை. வெறும் காட்சிகள்- திருப்பு முனை வைத்து நகரும் திரைகதைகளில், முதன்மை கதாபாதிரமேற்று நடிக்கும் நடிகர்களின் ஆயாச நடிப்பில் தான் பார்வையாளர்களை கவர முடியும். அந்த விதத்தில், பரத்தும், தமன்னாவும் அருமையாக நடித்துள்ளனர். கொஞ்சம் கொஞ்சம் மணிரத்தினத்தின் கதாபாதிரத்தின் சாயலில் அஞ்சலி கதாபாதிரம். கொஞ்சம் தவறி நடித்தாலும் முட்டாள்தனமாக அமைந்து விடும். அந்த விதத்தில் ,தமன்னாவிற்க்கும், அவர்களுக்கு dubbing கொடுத்த அம்மணிக்கும் பாராட்டுக்கள்.காதலும் , தவிப்பும் , உணர்ச்சிகள் அடக்கம் - இப்படி மாற்றி மாற்றி வருவதால் வித்யாசாகர் தன் திறமையை பாடல்களுடன் நிறுத்தியுள்ளார், பின்னனி,பின்னனி தான்.
உண்மையான காதல் படதிற்க்கு காத்து கிடக்க வேண்டும்.