நம் நாட்டின் மாடு சூடா மன்னர் இன்று காங்கிரஸ் மேல் ஒரு குண்டை வீசி இருக்கிறார்.  1992 வில் நடந்த பாபர் மசுதி இடிப்பிற்கு காங்கிரஸ் உடந்தை - அதாவது , அப்போழுது  பிரதம மந்திரியாக இருந்த நமது மொனலிசா நரஸிம்ம ராவ் பாபர் மசுதி இடிக்க படுமென்று  தெரிந்தும் ஒன்றும் பண்ணவில்லை.இது ஏற்க கூடியதாக இல்லை . எல்.கே.அத்வானி அவர்களே  இதை ஏதிர்பார்திருக்க மாட்டார்.பத்தியாயிரம் , உணர்வு ததும்பும் மக்கள் ஒரு  இடத்தில் ஒன்று கூடினால் , அங்கு என்ன நடக்குமென்று யாருக்கும்  தெரியாது-குஜராத்தில் நடந்ததை போல . ஆனால் இப்படி அவர்களை உணர்ச்சி வச படி பேசியது  பா.ஜா.காவின் சில தலைவர்களாக இருக்கலாம். சரி , இந்த விஷியத்திற்க்கு வருவோம்.  நமது லொள்ளு லாலு ஜி , பிரதம மந்திரியை பார்த்து அதிகம் பேச வேண்டாம் , அப்படி  பேசினால் , இது போன்ற ரகசியங்களை சொல்ல வேண்டியிருக்கும் யென்று ஏச்சி அரித்து  உள்ளார். ஐந்து ஆண்டு காலமாக இரயில்வே மந்திரியாக இருந்த போழுது, இது தெரிய வில்லை  . அதுவும் நம்ம பச்ச புள்ள மன்மோஹன் SINh பார்த்து! ஆனால இதை பற்றி நாம கவலை பட  வேண்டாம் . நோக்கியா ....மன்னிக்கவும்,சோனியா காந்தி மீது நம்பிக்கை  இருக்கிறதென்று கூரி விட்டு , இரண்டு அமைச்சர் பதவி வாங்கி கொண்டு காங்கிரஸ் ஆட்சி  வர நமது மாட்டுகார வேலன் உதவி செய்வார்.
***
இன்று IPL 2 வில் பஞ்சாப்  அணியினரும் தில்லி அணியினரும் மோதி முடிந்த வரை நம்மை அவமான படுத்தினர்.20-20  யென்பதே ஒரு சுருக்க பட்ட புது முயற்ச்சி. அதிலும் மழை காரணமாக ஒரு அணி 12 ஒவர்  பெட் செய்வதும் , மறுபடியும் மழை வந்து அடுத்த அணி வெறும் 7 ஒவர் விளையாடுவதும்  லூசு தனமாக இருக்கிறது.முடிந்த வரை IPL பார்க்காதிர்கள். இப்பொழுது உள்ள  பொருளாதார நிலைமயில் , எதாவ்து படிக்கவும். உங்களுடய மெள் அதிகாரிக்கு சோப்  போடவும். அதுவும் இல்லயென்றால் காண்டம் வாங்கி கொண்டு வீடிற்க்கு போகவும் .  எதாவ்து ஒன்று உருப்புடும்.
***
ஒரு வாரம் முன்பு அயன் பார்த்தேன்.  தமன்னாவின் உதடு , ஹாரிஸ் பாடல்கள், சுர்யாவின் திறமையான நடிப்பு , ஜகனின் ஹாஸியம்  , வில்லனை தவிர எல்லாம் நன்றாக இருந்தது.குறிப்பாக அந்த ஆப்ப்ரிக்க சண்டை  காட்சியின் வேகமும் , அழகான இருவர் நடுவே காதல் வளரும் விதமும், படம்  பார்ப்பவர்களின் கவனத்தை தம் மிலிருந்து திரைக்கு கொண்டு வருகிறது.ஆனால் , அந்த  வில்லன் ? இந்தியில் வசனத்தை பேசி , தமிழில் அதை டப் செய்து ,தமன்னாவிற்க்கு  போட்டியாக முடி வளர்த்து , ஹாரிஸை விட்டு ஒரு செல்லோ பின்னனி இசையை கொடுத்தால்  போதுமா? ஒரே ஒரு இடத்தில் , அவர் முதலில் கஞ்சாவை தொட்டு கொள்ளும் போழுது  மட்டும் அவர் கதாபத்திரம் அழுத்தமாக பதிகிறது.மற்றபடி , மஹாபாரததில் அரக்கனின்  கதாபாத்திராத்தில் எவ்வள்வு அழுத்தமோ, அதில் பாதி தான் இந்த வில்லனுக்கு.இந்த  படத்தில் ம்ற்றொரு நல்ல விஷியம் , ஜெகனின் கதாபாத்திரம் தான் . முன் பகுதியில் ,  ஹாஸியதிற்க்கும், பின் பகுதியில் , சென்டிமென்டிற்க்கும் நன்றாக ஒத்து வருகிறார்.  சந்தானதிற்க்கு நல போட்டி.
1+1=2 போன்று நல்ல லாஜிக் உள்ளது , சண்டை  காட்ச்சிகளிலும் கூட - சினிமாவின் விதிகளுக்கு உட்பட்டு! ஆக மோத்தம் முன்று மணி  நேரம் நல்ல டைம் பாஸ்!!!!
Sunday, April 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment